சண்முகம் சுவாமியார்.

செகராயசேகரப் பிள்ளையர் ஆலயச்சூழலில் பிறந்து வளர்ந்தவர். இளமையிலே ஆன்மீகத்திலே ஈடுபாடு கொண்டு விளங்கினார். தனது ஆன்மீகத்தினை மேம்படுத்த தென்னிந்தியத் திருவெண்ணாமலையில் ரமண மகரிசியின் ஆச்சிரமத்தில் சேர்ந்து ரமண மகரிசியின் சீடராகி நீண்டகாலம் உபதேசப் பணியாற்றியதுடன் ஆன்மீகத்தில் சிறந்த பயிற்சியும் பேறும் பெற்றார். இவர் ஆன்மீகத்திலே சிறப்புற்று விளங்கியமையால் பல மாணவர்கள் இவரினைக் குருவாக ஏற்றனர். மீண்டும் தனது ஊரான இணுவிலை வந்தடைந்தார். கந்தசாமி கோயில் திருவூஞ்சல் மடத்திலே தங்கியிருந்து தியானம் ஜெபம் என்பவற்றில் ஈடுபட்டார். இவரிடம் பல சீடர்களாகி கற்றனர். ஏறக்குறைய முப்பது வருடங்களிற்கு முன் இவர் சமாதியடைந்தார். இவருடைய சீடர்களில் குறிப்பிட்டுக் கூறக்கூடியவர்கள் தம்பிமுத்து, முதலித்தம்பி, வேலுப்பிள்ளை, தாவடி நடராசா போன்றவர்கள்.

நன்றி: மூலம் – சீர் இணுவைத் திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ