சதாவதானி நா. கதிரவேற்பிள்ளை

சதாவதானி அவர்கள் தோன்றிய காலம் ஈழம் ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு உட்பட்டிருந்ததால் தமிழ்மொழியும் சைவமும் வளர்ச்சி குன்றி நலிந்து சென்றது.  மக்கள் உத்தியோகத்துக்காகவும் பகட்டு வாழ்க்கைக்காகவும் ஆங்கில மொழி மீதும் கிறிஸ்தவ மதம் மீதும் மோகம் கொண்டிருந்தனர்.  இந் நிலையில் புலொலியில் தமிழ் பற்றும் சைவப் பற்றும் மிக்க குடும்பத்தில் நாகப்பிள்ளை சிவகாமிப்பிள்ளைகளுக்கு கதிரவேலர் 1871ல் தோன்றினார்.  இவர் ஆரம்பக் கல்வியை புலொலி சைவப்பிரகாச வித்தியாசாலையில் பெற்றார்.  அங்கேயே சில காலம் ஆசிரியராக இருந்தார்.  22ம் வயதளவில் தமிழகத்தில் காசிவாசி செந்திநாதயரிடமும் பெரியார் கனகசுந்தரம்பிள்ளையிடமும் தமிழ், இலக்கியம், வடமொழி, தொல்காப்பியம் கற்றுத்தேர்ந்தார்.  தாம் பிறந்த ஊரில் உள்ள புது சன்னதிக்கந்தனை புகழ்ந்து சுப்பிரமணிய பராக்கிரமம், சைவசந்திரிகை, சிவாலயமகோற்சவ விளக்கம், சைவசிந்தாந்தச் சுருக்கம் ஆகிய நூல்கள் அவரது சைவப் பணியை விளக்குகிறது.  அக்காலத்தில் சைவசமயத்தை தூக்கி நிறுத்தி புத்துயிர் பெறச்செய்துள்ளது.

Add your review

12345