சிவத்திரு. த. கந்தையா

இணுவையம்பதியில் வீரசைவ குலத்திலே திரு. தம்பிப்பிள்ளை – நாகம்மை தம்பதியினருக்கு 01.05.1915ம் ஆண்டு பிறந்தார். பூர்வ புண்ணியப் பயனாக, சுதுமலை எச்சாட்டி வைரவசுவாமி கோயிலுக்கு சிறுவனாக இருந்தபோதே பூசகரானார். இணுவிலில் இருந்து இரண்டு மூன்று வேளை தினமும் நடந்து வந்து தம் கடமையைச் பக்தி சிரத்தையோடு செய்து வந்தார். ஐயாவின் பக்திக்கு கட்டுப்பட்டு வைரவப் பெருமானும் அவருடைய நாவிலும், கையிலும் திருநீற்றிலும் எழுந்தருளி பார்வை பார்த்தாலும், நூல் கட்டினாலும் நோய்கள் துன்பங்கள் எல்லாம் மாயமாய் மறைந்துவிடும்.

1949ஆம் ஆண்டு தொடக்கம் சுதுமலை குரங்லிப்பான் பிள்ளையார் கோயில் பூசகராகவும் இருந்தார். இரு ஆலயங்களின் உயர்ச்சியில் முழு மூச்சாக ஈடுபட்டு அவ்வாலயங்களை சிறப்புற வழிநடத்தி வந்தார்.

வைரவப் பெருமான் தொண்டுகளை திரிகரண சுத்தியுடன் ஆற்றிவந்த சிவத்திரு கந்தையா ஐயா அவர்களுக்கு 1991 ஆம் ஆண்டு ஆடிப்பூர தினத்தில் எச்சாட்டி வாழ் மக்கள் பழைய வைரவசுவாமி கோயிலில் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்கள். 2001 ஆம் ஆண்டில் எச்சாட்டி சின்ன வைரவர் ஆலய மஹா கும்பாபிஷேகத்தின் போதும் இவரது சேவையைப் பாராட்டி, பொன்னாடை அணிவித்து மக்கள் மகிழ்ந்தனர். ஐயா அவர்கள் தனது 86வது வயதில் 06.02.2001 அன்று சிவத்துடன் ஐக்கியமானார்.

நன்றி-www.suthumalai.comஇணையம்

1 review on “சிவத்திரு. த. கந்தையா”

Add your review

12345