சோதிலிங்கம் சுவாமியார்.

இவரது இயற்பெயர் தனபாலசிங்கம். இவர் தந்தையின் தாயாரான சின்னாச்சியம்மாவுடனே வாழ்ந்தார். மஞ்சத்தடி முருகனுக்கு ஆலயத் தொண்டு செய்வதிலேயே இவரது பணியாரம்பித்தது.

அறக்காவற்குழுவின் உபதலைவராக விளங்கிய இவர் ஆலய அர்த்த மண்டபம், கருவறை, மகாமண்டபம் என்பவற்றைக் கட்டுவித்ததுடன் உள்வீதியின் புறச் சுற்றுமதிலையும் கட்டுவித்து திருப்பணிகளில் திருப்தி கண்டார். சோதிடம் மாந்திரீகம் போன்றவற்றிலும், கிணறு, வீடு போன்றவற்றிற்கு நிலம் எடுப்பதிலும் சிறப்புடையவர். அரங்கன் சன்மார்க்க சபை என்ற பெயருடன் ஒரு சபையினையும் நடாத்தி வருகின்றார். இவரது தோற்றம் காவியுடையும் தலைப்பாகையும் கொண்டு காணப்படும். இவரது வழிகாட்டலிலேயே சிறந்து விளங்கிய பொ.சந்திரன் சோதிடத்தில் சிறப்புற்று விளங்குவது சுவாமியவர்களின் சித்துக்கு எடுத்துக்காட்டாகும்.

நன்றி: மூலம் – சீர் இணுவைத் திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்