டாக்டா்.மு. மாசிலாமணி

டாக்டா்.மு. மாசிலாமணி டாக்டா்.மு. மாசிலாமணி அவர்கள் மட்டக்களப்பில் வைத்திய துறையில் ஆழத் தடம் பதித்த ஒரு பெரியவர்.

ஆரையம்பதி மக்கள் எவரேனும் உடல்நலம் குன்றிப்போனால் சிறுவா்கள் முதல் முதியவர்கள் வரை சொல்வது ‘மாசிலாமணி ஐயாட்ட போய் ஓரு கலவை எடுத்தா எல்லாம் சரியாய் போயிடும்‘ இவ் கதையில் துளியெனும் பொய்யில்லை என்பது மட்டக்களப்பு மாவட்டத்தில் இவரிடம் வைத்தியத்திற்கு வந்து போன யாவரும் அனுபவித்த விடயமாகும். மருந்தை விடவும் கனிவான பேச்சும் அன்பும் உளவியல் ரீதியாக மனிதனை குணப்படுத்தும் என்பதற்கு மாசிலாமணி என் உயா்ந்த மனிதன் ஒருவரே போதுமான உதாரணமாகும். இது மட்டுமல்லாமல் தனது வாரிசுகள் அல்லது சகோதரா்கள் அல்லது உறவினா்கள் வைத்தியர்களாக இருந்தாலும் மாசிலாமணி ஐயாவின் வைத்தியம் மட்டுமே தங்களை குணப்படுத்தும் என்ற எண்ணமும் இன்னமும் இக்கிராமத்தில் பரவலாக காணப்படுகின்றது.

1932 ஐப்பசி 25 ம் நாள் ஆரையம்பதியில் முருகேசு – தம்பதிகளுக்கு மகனாக பிறந்த மாசிலாமணி தனது ஆரம்ப கல்வியை ஆரையம்பதி இராம கிருஸ்ன மிசன் பாடசாலையிலும் பின்னா் உயா் கல்வியை கல்லடி சிவானந்த கல்லுாரியிலும் பயின்றார். தனது எஸ்.எஸ்.சி பாரீட்சையின் பின்னா் இலங்கை மருத்துவ கல்லுாரி சென்று வைத்தியா் பட்டம் 1959 ல் பெற்றார். நாட்டின் பல்வேறு பாகங்களில் 31 வருடங்கள் அரச வைத்தியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.

தனது அரச வைத்திய ஓய்வுக்குப்பின்னா் தனது வீட்டுடன் ஓா் மெடிக்கல் கிளினிக் ஆரம்பித்து தனது சேவையின் இரண்டாவது கட்டத்தை ஆரம்பித்த இவா், தனது இறுதி மூச்சு வரை ஒய்வில்லாமல் வழங்கியவா். இவர் தனது மருத்துவ சேவையை சலுகை அடிப்படையில் வருமானத்தை நோக்காக கொண்டு செய்யவில்லை என்பதுடன், ஆரையம்பதி கிராமம் மட்டுமல்லாது முழு மாவட்டத்திற்கும் தனது வைத்திய சேவையை வழங்கியவா் என்பதும் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டிய விடயங்களாகும். ஆரையம்பதி கந்தன்பால் மிகவும் ஈடுபாடு கொண்ட இவரின் இறைபணி என்பது இக்கிராம வரலாற்றில் ஒரு தனி அத்தியாயமாகும்.

By – Shutharsan.S

நன்றி- தகவல் மூலம் -ஆரையம்பதி டொட் நெற் இணையம்.