திரு.சி கனகசுந்தரம் ஆசிரியர்.

ஆரம்பக் கல்வியை அமெரிக்கன் மிஸன் தமிழ்க் கலவன் பாடசாலையிலும் மேல் வகுப்பை கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் கற்றார். கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையிலும் கற்று இணுவில் சைவப் பிரகாச வித்தியாசாலையில் கற்பித்தார். இவர் அதிபராக பதுளையிலும், கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாசாலை, அமெரிக்க மிஸன் தமிழ்க் கலவன் பாடசாலை போன்ற பாடசாலையில் கடமையாற்றினார். மஞ்சத்தடி முரகன், கப்பனைப் பிள்ளையார், இணுவில் கந்தசாமி கோயில் ஆகிய ஆலயங்களை இடையறாது வணங்கி வந்தார்.

நன்றி : மூலம்- சீர் இணுவைத்திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்

Add your review

12345