திரு.சேதுலிங்கம்.

பரமானந்த வல்லி அம்பாள் ஆலயத்தின் வடபால் தோன்றியவர். சிவசின்னமான வீபூதி, உருத்திராட்சம் என்பவற்றை தவறாது அணிந்து வாழ்ந்தவர். ஆரம்பக் கல்வியை இணுவில் சைவப்பிரகாசாலையில் கற்றார். கோயில்களிலே நடைபெற்ற புராணங்களிற்கு உரை சொன்னார். பண்ணிசையில் ஈடுபாடு கொண்டு மாணவர்களையும் அதில் ஈடுபடுத்தினார். இரவில் மாணவர்களிற்கு வகுப்புக்களையும் நடத்துவார். கப்பனைப்பிள்ளையார், கந்தசாமியாலயம், சிவகாமியம்மன் ஆலயம் போன்றவற்றினைத் தினமும்; சென்று வழிபாடாற்றி வருவார்.

நன்றி : மூலம்- சீர் இணுவைத்திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்

Add your review

12345