தெல்லியூர் செ. நடராசா

செ. நடராசாதெல்லியூர் செ. நடராசா அவர்கள் பிரபலமான அறிஞர், சோதிடக் கலையில் வல்லவர். சிறுகதை, நூவல், வரலாறு முதலான பல் துறை சார்ந்த ஏராளம் நூல்களை வெளியிட்டுள்ளார். அத்துடன் பல நூல்கள்,மலர்களின் பதிப்பாசிரியராகவும் விளங்குகின்றார். ஆண்டுதோறும் வெளிவந்து கொண்டிருக்கும் “நல்லைக் குமரன் மலருக்கு” கௌரவ ஆலோசகராயிருந்து வருவதே இவரின் அறிவுத்திறனுக்குச் சான்றாகும். இவரது சிறுகதைகளில் தேசபக்தி 1946, கோகிலம் 1946, நீலறிஞன் 1947, காதல் கொலை 1950, காலேஜ்காதல் 1951 இரகுநூதன் 1952 என்பனவும் நாவல்களில் அபலைப் பெண் (1965) என்பன குறிப்பிடத்தக்கன. சோதிடத்தில் பல ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ள இவர் திருமணம், எண்களில், மனிதவாழ்வு, ஜுவயாத்திரை (1960) சோதிடமும் நோய்களும் (1964) எனப் பல நூல்களை வெளியிட்டுள்ளார்.

வரலாற்றுத் துறையில் பாண்டித்தியம் மிக்கவர் என்பதற்கு தமிழன்மாட்சி 1947, நல்லை நூவலர் 1949, ஈழநூட்டில் தமிழன் மானம் 1950, துறவி விவேகானந்தர் 1950 முதலான நூல்கள் சான்றாகும்.
By – Shutharsan.S

Add your review

12345