நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்

ஜேர்மனிய அரசாங்கம் தனது தபால் முத்திரை ஒன்றிலே நமது தமிழ்பெரியார் ஒருவரின் உருவத்தைப் பொறித்து வெளியிட்டதென்றால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அத்தகைய புகழுக்குரியவர் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர். வடமொழி, தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளை நன்கு கற்றிருந்த சுவாமியவர்கள் எழுபது மொழிகளைப் பற்றி அறிந்திருந்தார்.

‘தமிழர் பூர்விக சரித்திரம்’ ‘யாழ்ப்பாணத்தரசர்கள்’ ‘ யாழ்ப்பாண சரித்திரம்’ ‘ இந்திய நாகரிகம்’ ‘தமிழர் வரலாறு’ ‘ தமிழரிடையே சாதி பிறந்த முறை’ ‘ தமிழரின் பூர்வ இருப்பிடம்’ ‘தமிழ் அமைப்புற்ற வரலாறு’ ‘தமிழ்ச் சொற் பிதிர்’ ‘தமிழ்த் தாதுக்கள்’ ‘மொழிக்குடும்பம்’ ‘தருக்க சாஸ்திரம்’

என்பன சுவாமியவர்களின் அரிய நூல்களாகும். ஒரு மொழியின் ஆராட்சி வேலைகளில் அகராதி தொகுப்பதும் ஒரு துறையாகும். மிகக் கடினமான இத்துறையிலே யாழ்ப்பாணம் என்றுமே முன்னணியில் நின்றிருப்பதை எவருமே ஒப்புவர். இந்த அகராதி வரிசையில் புதியதொரு பாதையை வகுத்துச் ‘சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி’ என்ற பெரும் பணியைச் செய்த இத்தொண்டே சுவாமியவர்களை தமிழரும் மேலைநாட்டாரும் என்றென்றும் நினைவில் வைத்திருக்கப் போதுமானது.

2 reviews on “நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்”

  1. உங்களால் குறிப்பிடப்பட்டுள்ள சுவாமி ஞானப்பிரகாசர் நல்லுரைச்சேர்ந்தவரல்லர். அவர் மானிப்பாயைச் சேர்ந்தவர்.
    ஆனால் நல்லுர் ஞானப்பிரகாசர் பசுவதைக்கஞ்சி இந்தியா சென்றவர்.
    அவர் வேறு.இவர் வேறு. எல்லோரும் இதனை தவறாக பதிவு செய்துள்ளனர்.நீங்கள் ஆராய்ந்து பார்த்து பிரசுரித்தல் நல்லது.

  2. அருள்சந்திரன் ! தகவலுக்கு நன்றி. பேராசிரியருடன் கலந்தாலோசித்து மாற்றங்களை மேற்கொள்ள முயற்சிக்கிறேன்.
    நன்றி.

Add your review

12345