பண்டிதமணி கணபதிப்பிள்ளை

இவர் மிகச்சிறந்த சொற்பொழிவாற்றல் உடையவர்.  இவருடைய கட்டுரைகள் இலங்கை சஞ்சிகைகளிலும் தமிழகத்திலும் சிறப்பாக இடம்பெற்றன.  பல வெண்பாக்களை இயற்றியுள்ளார்.  சில கவிதைகளும் எழுதியுள்ளார்.  இவர் காலத்தில் கரையூரில் டாக்டர் சுப்பிரமணியம் என்ற தருமவான் சொந்த வைத்தியசாலை வைத்திருந்தார்.  தொழிலால் பணம் சேர்த்த அதே நேரத்தில் இலவச வைத்தியமும் செய்தார்.  அவரைப் பாராட்டி பண்டிதமணி சிறந்த வெண்பா ஒன்று எழுதியுள்ளார்.

“மனிதருள்ளும் தெய்வம் மனித உருத் தாங்கி இனி தமர்தல் உண்டேயா மெங்கள் – கனியமிர்தம் டாக்டர் சுப்பிரமணியம் இவவுலகத் தெய்வம் காண் மாப் பெரிய இந்த மகான்”

Add your review

12345