பரமர் சுவாமியார்.

சுப்பையா உபாத்தியாரின் மகன் இணுவிலைச் சேந்தவர். அமெரிக்கன் மிசன் பாடசாலையில் கல்வி கற்றார். குலதெய்வமாக சிவகாமியம்மனையே வழிபாடாற்றி வந்தார். அம்பாளுக்கு சரியைத் தொண்டையும், கிரியைத் தொண்டையும் மேற்கொண்டார். தனது நண்பர்களுடன் சேர்ந்து மகோற்சவ காலங்களிலும், வெள்ளிக் கிழமைகளிலும், விசேட தினங்களிலும் பஜனை பாடித்திரிந்தார். இவரது பக்தி வெள்ளத்தில் மயங்கியவர்கள் இவரினை பரமுச்சாமியர் என அழைத்தனர்.

இவருடைய முயற்சியாலே அம்பாளுக்கு பூந்தோட்டம், கிணறு என்பன தோற்றுவிக்கப்பட்டன. சூரன், சிங்கம், வெண்புரவி போன்ற வாகனமும் இவரது முயற்சியால் உருவாக்கப்பட்டது. 72 வருடகாலமாக மகிடாசூரன் போர் நடைபெற்று வருகின்றது. இவருக்குப் பின் இவருடைய புத்திரர்களே பஜனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நன்றி: மூலம் – சீர் இணுவைத் திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்