வேலுப்பிள்ளைச் சாமியார்

இணுவில் கந்தசாமி கோயில் வாசல் என்ற முகவரியைக் கொண்டு பிறந்து வளர்ந்தவர் வேலுப்பிள்ளைச் சாமியார். பாடசாலைப் படிப்புடன் இலக்கணம், இலக்கியம், சமய தத்துவம் போன்றவற்றை சேதர்ச் சட்டம்பியார் என்பவரிடமும் வடிவேற் சுவாமிகளிடமும் கற்றுக் கொண்டார். இவர் மேற்படிப்பினை மேற் கொள்ளாது சீவனோபாயத் தொழில் செய்து வந்தார். இவருடைய தோற்றப் பொலிவு நாலு முழவேட்டி, தோளில் ஒரு சால்வை எந்நேரமும் தூயஉடை, அன்பான பேச்சு போன்றன இயல்பாகவே காணப்பட்டன. சிறிது காலத்தின் பின் தனது சகோதரன் மார்க்கண்டு நடாத்திய வியாபாரத்தில் உதவியாளராக இருந்தார். நாளேடுகளை வாசிப்பதில் அக்கறைகாட்டினார். அதனை வாசித்தும் காட்டுவார். தனது சேவையால் வாசிக சாலை ஒன்றும் அமைத்தார். சமய சித்தாந்தக் கருத்துக்களையும் வழங்கி இன்புற்றார்.

 

By – Shutharsan.S
 

நன்றி: மூலம் – சீர் இணுவைத் திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்

Add your review

12345