80 ல் இருந்து 88 வரை

80 ல் இருந்து 88  வரை

அருள்திரு வின்சன்ற் பற்றிக் அடிகளாரின் இந்த இதழ் சமூக முன்னேற்றத்திற்காக சொல்லும் செயலும் ஒன்றாய் நடைமுறைக்குத் தேவையான மனிதத்துவத்தின் மகிமையை மதித்து வாழத் தூண்டும் அறிவுரைக் கடிதங்களாகத்தான் இருக்கின்றன 80 ல் இருந்து 88  வரை. இவர் பல தலைப்புகளில் சிறப்பான மொழிநடையில் எழுதியுள்ளார். ஈழத்து இலக்கியத்திற்கு இவ் எழுத்தாளரின் பங்கும் மகத்தானது.

உள்ளம் என்ற கண்ணாடி

அழுக்கு கண்ணாடியில் பட்டு விட்டால் நாம் கண்ணாடி முன் நின்றாலும் எம் உடலைத் தெளிவாக காண முடியாது. அவ்வாறே எமது உள்ளம் என்ற கண்ணாடியில் கறைபட்டு விட்டால் எம்மை முழுமையாகக் காணமுடியாது.
கள்ளம் இன்றி வெள்ளை உள்ளம் கொண்டு வாழ்வோர் தம்மைத் வெளிவாகக் காண்பார்கள்…..என்ற வரிகள் அர்த்தம் பொருந்தியதாக உள்ளது.

இதை விட அவர் பல தலைப்புகளில் எழுதியுள்ளார். ”உயர்ச்சிகளுக்கு அப்பால்”, ”எல்லோரும் நல்லவரே”, ”தவறு தவறட்டும்”, ”யார் அழுதால் என்ன”, ”முன்னணியில் நிற்பவர்கள்”, ”விடிவை நோக்கி”, ”உளச் சக்தியின் உச்ச நிலை”,  ”அறப்போருக்கு அழைப்பிதழ்” ’, ”ஒரு உதவாக்கரை”, ”நீர்க்குமிழி”…எனப் பல.

By – Shutharsan.S

Add your review

12345