வளம்மிகு பனைகள்

யாழ்ப்பாணம் என்றதுமே நம் கண் முன் நிற்பது பனைகள்தான். பல்வேறு பயனுடைய பனைகள் எமது கற்பகதரு. கறுத்து நிமிர்ந்து உரமேறிய உடலுடன் வட்டில் பரப்பிய ஓலையுடன் பண்பாட்டுச் சின்னமாய் யாழ் குடாநாடெங்கும் பரந்துள்ளது. கூரையாய், வேலியாய், கிராதியாய், சுவராய், கால்நடை உணவாய், விறகாய், மனித உணவாய், அலங்காரப் பொருளாய், பண்பாட்டுச் சின்னமாய், இயற்கைப் பாதுகாவலனாய், மருந்தாய் பல்வேறு கோணங்களில் உள்ள பனைகளைப் பாதுகாக்க வேண்டியது நமது கடப்பாடாகும்.

Add your review

12345