பொந்துக் கிணறு

தொண்டமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள இக்கிணறு மிகவும் பிரசித்தமானது. இடிவிழுந்து பொந்துக்கிணறு தோன்றியதாகக் குறிப்பிடப்படுகின்றது. நிலாவரைக் கிணறுபோல இறைக்க இறைக்க வற்றாத கிணறாகும். நாளொன்றுக்கு 42000 லீற்றர் நீர் தொண்டைமானாற்றிலிருந்து வல்வெட்டித்துறை நகரப்பகுதி, பொலிகண்டி, ஊறணி வரையான பகுதிகளுக்கு குழாய் மூலம் 24 நீர்த் தொட்டிகளுக்கு பொதுமக்களின் பாவனைக்கென நீர் வழங்கப்படுகின்றது. தொடர்ந்து இக்கிணற்றிலிருந்து நீரை எடுப்பதனால் அண்மையில் உள்ள விவசாயக் கிணறுகள் நீர்மட்டம் குறைவடையும் என விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். இவ்விடயம் ஆய்வுக்குரியது.

Add your review

12345