யாழ் பல்கலைக்கழகம்

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பல ஊர்களில் கிறிஸ்த்தவப் பாதிரிமார்களாற் பல கல்லூரிகள் நிறுவப்பட்டு அங்கே பயில்வோருக்குப் பல வாய்ப்புக்களும் அளிக்கப்பட்ட காலத்தில், எங்களுக்கு வாய்ப்புகள் குறைந்தாலும் சரி. முற்றாக இராதொழிந்தாலும் சரி, எமக்குச் சைவமும், தமிழும் இரு கண்கள் என்ற நோக்குடன் அந்த பரமேசுவரன் நாமத்துடனேயே ஒரு பிரமாண்டமான கல்லூரி கட்டப்பட்டது. பக்கத்திலேயே பரமேசுவரனுக்கு ஒரு ஆலயமும் எடுக்கப்பட்டது. எண்ணிறைந்த கல்விமான்களையும், சமயத்தொண்டர்களையும், விளையாட்டு வீரர்களையும் உற்பத்தி செய்து பரமேஸ்வராக் கல்லூரி பெருமை தேடிக்கொண்டது. இன்று யாழ்,பல்கலைக்கழகமாக மிளிர்ந்துள்ளது. கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகட்கு முன் இங்கு ஆசிரியப் பயிற்சிக் கலாச்சாலை ஒன்று இயங்கியது. பின்பு அது பலாலிக்கும், கோப்பாய்க்கும் மாற்றப்பட்டுவிட்டது. கலாசாலை வீதி மட்டும் எஞ்சியுள்ளது. அதே இடத்தில் முத்துத்தம்பி வித்தியாசாலையும், அநாதை இல்லமும் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. மேலும் இரண்டு சிறு பாடசாலைகளும் உண்டு.

Add your review

12345