வெங்காயம்

யாழ்ப்பாண முதுசங்களில் இதுவும் ஒன்று. யாழ்ப்பாண வளங்களில் வெங்காயச் செய்கையும் பிரபலமானது. பல்வேறு இடங்களில் வெங்காயம் செய்யப்பட்டாலும் யாழ்ப்பாண வெங்காயத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. ஏனெனில் மிகவும் காரமாகவும் சுவையாகவும் இருக்கும். சின்ன வெங்காயம், வேதாளக்காய் போன்ற வகைகள் பயிரிடப்படுகின்றன. கிட்டத்தட்ட மூன்று மாத காலப்பகுதியில் அறுவடை செய்யலாம். இரண்டு போகங்களாக செய்கை பண்ணப்படுகிறது. அறுவடையின் பின் வெங்காயத்தை சேமித்து வைக்கக்கூடியவாறு பிடிகளாக கட்டப்படுகிறது. ஈக்குப்பிடிகளாக அல்லது பெரிய பிடிகளாக கட்டப்படுகிறது. பச்சையாக வெங்காயத்தை உண்பது கொலஸ்ரோலை கரைப்பதுடன் இரத்த ஓட்டத்தையும் சீராக்குவதாக மருத்துவம் கூறுகிறது.