அல்லாரை தமிழ் கலவன் பாடசாலை

அல்லாரை தமிழ் கலவன் பாடசாலை ஆனது யாழ் மாவட்டத்தில் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவில் உள்ள கிராமங்களில் அல்லாரை ஒரு சிறிய கிராமமாக 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் வளர்ச்சியடைந்து வந்தது. 1930ஆம் ஆண்டிற்கு முன்னர் அல்லாரை, மீசாலை கிழக்கு , வெள்ளாம் போக்கட்டி, கச்சாய் ஆகிய பகுதிகளுக்குப் பொதுவாகக் கச்சாய்க்கிராமத்தில் ஒரு அமெரிக்கன் மிசன் பாடசாலை இயங்கி வந்தது. சைவப் பிள்ளைகள் கல்வி கற்பதற்கும் சமய அறிவைப்பெறுவதற்கும் எதுவித வசதியும் இருக்கவில்லை.

அல்லாரை தமிழ் கலவன் பாடசாலைஎனவே இங்குள்ள சிறார்களின் கல்வி விருத்தியடைய வேண்டுமென்ற உயர்ந்த நோக்குடன் அல்லரையை சேர்ந்த எஸ் .கே. செல்லையா அவர்கள் உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பெரு முயற்சி எடுத்தார். எஸ் .கே. செல்லையா அவர்கள் ஒரு பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியர் அத்துடன் அல்லாரையில் புகழ் பூத்த அனைவராலும் போற்றப்படுகின்ற உதவி வழங்குகின்ற ஊர்ப் பெருமகனாகவும் திகழ்ந்தார்.

1930 ஆம் ஆண்டு பாடசாலைக் கட்டடத்தினை அமைப்பதற்கான தனது காணி ஒன்றை நன்கொடையாகக் கொடுத்து பாடசாலைக் கட்டடத்திற்கு அத்திவாரமிட்டார். முதலில் அதிபர் விடுதி ஒன்றும் பாடசாலை வகுப்பறைகளுக்காகக் கொட்டிலும் அமைக்கப்பட்டது.
 அமரர் திரு. தம்பிமுத்து பாடசாலையின் முதல் அதிபராக நியமனத்தை ஏற்றுக்கொண்டார். ஆரம்பத்தில் 30 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையில் திரு. தம்பிமுத்து ஆசிரியராகக் கடமையாற்றினார். இவர் அதிபர் விடுதியில் தங்கியிருந்தார். இவரின் காலத்திலேயே பாடசாலை வளவின் கிழக்கு பக்கத்தில் ஒரு அறையுடன் 40 அடி நீளமுள்ள கட்டடம் அமைக்கப்பட்டது. 1932 ஆம் ஆண்டில் புதிய கட்டடத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டன.

இரண்டாவது அதிபராக 1936 ஆம் ஆண்டில் திரு. நல்லதம்பி பாடசாலை பொறுப்பை ஏற்றார். இவர் பணிபுரியும் காலத்தில் மதியபோசனம் வழங்கப்பட்டது. இதனால் மாணவர் தொகையும் அதிகரிக்கத் தொடங்கியது. எனவே இதற்கு பக்கபலமாக 50 அடிக் கட்டடம் பழைய கட்டடத்துடன் இணைத்து L வடிவில் அமைக்கப்பட்டது. அத்துடன் திரு. கந்தப்பு என்னும் உதவி ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். இவர் கரவெட்டியை பிறப்பிடமாகக்கொண்டவர்.

1938 ஆம் ஆண்டில் தரம் 5 வரை வகுப்புக்கள் நடைபெற்றன. இதே காலத்தில் தரம் 5 பொதுப்பரீட்சையும் நடைபெற்றது. தொடர்ந்த வருடங்களில் தரம் 7 வரை வகுப்புக்கள் நடைபெற்றன. இக்காலப்பகுதியில் கிணறும் கட்டப்பட்டது.

திரு. குமாரவேலு அதிபரின் காலத்தில் மாணவர் தொகை அதிகடித்தது. இதனால் ஆசிரியர்களின் எண்ணிக்ககையும் அதிகடித்தது. இவருக்கு அடுத்ததாக மிருசுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. சுவாமிப்பிள்ளை என்பவர் அதிபராகக் கடமையாற்றினார். இவரின் காலத்தில் பாடசாலை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டது.

இவரை தொடர்ந்து ஆறாவது அதிபராக எஸ்.பி. சுவாமிநாதன் அதிபராகக் கடமையாற்றினார். இவரின் காலத்தில் மீசாலையை சேர்ந்த ஆசிரியர்களும் கடமையாற்றினார்கள். பாடசாலை முன்னேற்றமடைந்தது. திருமதி. பூரணம் பஞ்சாச்சரம் ஆசிரியர் குறிப்பிடத்தக்கவர். இவரின் காலத்தில் L வடிவமாக இருந்த கட்டடம் T வடிவமாக 50 அடி நீளத்துக்கு அமைக்கப்பட்டது.

இவரை தொடர்ந்து ஏழாவது அதிபராக கோப்பாயைச் சேர்ந்த திரு. சுப்பிரமணியம் என்பவர் அதிபராக நியமிக்கப்பட்டார். இவரது காலத்திலும் பாடசாலை முன்னேற்றம் கண்டது.

எட்டாவது அதிபராக திரு.தம்பிராசா பொறுப்பேற்றார். ஒன்பதாவது அதிபராக வரணியை சேர்ந்த திரு.தங்கராசா அதிபராகப்பொறுப்பேற்றார்.
பத்தாவது அதிபராக சாவகச்சேரி வடக்கைச் சேர்ந்த திரு. வ. சுப்பிரமணியம் கடமையாற்றினார். இவரின் காலத்தில் அல்லாரையைச் சேர்ந்த நவசிவாயம் வல்லிபுரம் இடமாற்றம் பெற்று உதவி ஆசிரியராகக் கடமையாற்றினார். இவர்களின் காலத்தில் பாடசாலை பல துறைகளில் முன்னேறியது. முதல் முதல் இல்ல மெய்வல்லுநர் போட்டி நடைபெற்றது. அத்துடன் மாணவர்கள் சுற்றுலா சென்றனர். திரு. சுப்பிரமணியத்தை தொடர்ந்து மீசாலையைச் சேர்ந்த திரு. பொ. மார்க்கண்டு பதினோராவது அதிபராக கடமையாற்றினார். இவரை தொடர்ந்து பன்னிரண்டாவது அதிபராக திரு. ந. பேரம்பலம் அதிபர் பொறுப்பை ஏற்றார்.

அல்லாரை தமிழ் கலவன் பாடசாலைபதின்மூன்றாவது அதிபராக மீசாலையைச் சேர்ந்த திரு. அருளானந்தம் அதிபராக நியமனம் பெற்று பாடசாலையை சிறந்த முறையில் முன்னேற்றினார். இவர் எஸ்.பி. சுவாமிநாதன் அவர்களின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரை தொடர்ந்து பதின்நான்காவது அதிபராக கச்சாயை சேர்ந்த செல்வி. திரவியநாயகம் வேலுப்பிள்ளை பாடசாலை அதிபராக நியமனம் பெற்று 2000 ஆம் ஆண்டு யூலை மாதம் வரை சேவையாற்றினார். இவரை தொடர்ந்து திரு. சே. சிவபாதசுந்தரம் பாடசாலை இடம்பெயர்ந்திருந்த காலத்தில் அதிபர் பொறுப்பையேற்று நடத்தினார்.

2001 செப்ரெம்பரில் இருந்து திருமதி. சி. ஜெயக்குமார் பாடசாலை அதிபராக கடமையாற்றினார்.

2010 ஜனவரி முதல் தற்போது வரை திருமதி. க. யோகநாதன் பாடசாலை அதிபர் பொறுப்பையேற்று நடாத்தி வருகிறார்.

மகுட வாசாகம் -ஒழுக்கம் உயர்வு தரும்
இலச்சினையின் விளக்கம் – சமயம், கலை, கல்வி , கலாச்சார விருத்தி
தேர்தல் தொகுதி –  சாவகச்சேரி
உதவி அரசாங்க அதிபர் பிரிவு – தென்மராச்சி
கிராமசேவகர் பிரிவு – அல்லாரை தெற்கு J/322
பாடசாலை தொடங்கிய ஆண்டு – 1930
பாடசாலை பதிவிலக்கம் – 1003012
தொகை மதிப்பீட்டு இலக்கம் – 09363

பாடசாலைக்கீதம்


இராகம்: ஹம்சத்வனி                            தாளம் :ஆதி தாளம்

பல்லவி

அல்லாரை அரசினர் வித்தியாலயம் பாரீர்

எல்லோரும் இதனை முன்னேரிற்ற வாரீர்

(அல்லாரை)

அனுபல்லவி

செல்லையா ஆசிரியர் உவந்தளித்திட்ட

நல்லதோர் காணியில் அமைந்த ஆலயமே

(அல்லாரை)

சரணம்

திருமகள் கலைமகள் மலைமகள் அருளால்

பொருள் வளம் கல்வி வீரம் பெற்று

அருள்வழி நின்று அறந்தனைக் காத்து

வரும் மாணவர்கள் மாண்புடன் வாழ்க

(அல்லாரை)

மாணவர் கல்வி அதில் முன்னேற்றம்

காணத் துடிக்கும் ஆசிரியர்கள்

பேணும் நலன்கள் யாவையும் பெற்று

வீணற வாழ்க வாழ்க எந்நாளுமே

(அல்லாரை)
இயற்றி இசையமைத்தவர் : சங்கீதபூஷணம் த. வாமதேவன், மட்டுவில்
By -‘[googleplusauthor]’
மேலதிக விபரங்களுக்கு http://www.allaraigtms.sch.lk

தொடர்புடைய ஆக்கங்கள்


Add your review

12345