உரும்பிராய் இந்துக் கல்லூரி

1911 ஆம் ஆண்டு இவ்வூர் பிரமுகர்களின் ஒத்துழைப்புடன் உரும்பிராய் இந்துக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இக் கல்லூரி சமீபத்தில் பவளவிழாவைக் கொண்டாடியதுடன் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வரலாறுகளை உள்ளடக்கிய பவளவிழா மலரினையும் வெளியீடு செய்தது. ஆங்கில மொழிக்கு அந்தஸ்து இருந்த காலத்தில் உரும்பிராய் மாணவர்களும், அயலூர் மாணவர்களும் சமயக் கோட்பாடுகளையும் ஆங்கில மொழியையும் நன்கு அறிந்துகொள்ள உதவியது உரும்பிராய் இந்துக் கல்லூரி. அறிஞர்கள் பலர் இந்தவூரில் உருவாவதற்கு இக்கல்லூரி உழைத்த உழைப்பு மகத்தானது. மகாவித்தியாலய அந்தஸ்தினை முன்னரே பெற்றுக் கொண்ட உரும்பிராய் இந்துக் கல்லூரி உரும்பிராய்க் கொத்தணியின் மூலாதாரப் பாடசாலையுமாகும்.

 

ஒரு காலத்தில் சமயத்தைப் பரப்பும் அடிப்படை நோக்கில் கிறிஸ்தவ பாடசாலைகள் அமைக்கப்பட்டன. இந்த நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் அங்கிலிக்கன் சபை உரும்பிராயிலும் ஒரு பாடசாலையை நிறுவியது. ஆங்கிலம் தமிழ் இரு மொழிகளையும் கற்பிக்கும் பாடசாலையாக இயங்கியது. இந்துக் கல்லூரி அதிகார சபையினர் ஆங்கில பாடசாலையொன்றைஉரும்பிராயில் நிறுவியதனால் கிறிஸ்தவ பாடசாலையில் உள்ள ஆங்கிலப்பகுதி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து தமிழ் மட்டும் போதிக்கப்பட்டு வந்தது. அரசாங்கம் பாடசாலைகளைக் கையேற்றதையடுத்து இப்பாடசாலை மூடப்பட்டது. உரும்பிராயில் முதன்முதல் ஆரம்பித்த பாடசாலை இது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி- ஆக்கம்-ஆசிரியமணி திரு அ பஞ்சாட்சரம்

மூலம் -http://www.eurumpirai.comஇணையம்

Add your review

12345