இடைக்காடு ஸ்ரீ பெரிய தம்பிரான் ஆலயம்

காக்கை வளவு என்னும் இடத்தில் கோவில் கொண்டுள்ள ஸ்ரீ பெரியதம்பிரான் ஆலயத்தின் ஆரம்பகாலத்தைச் சரியாக அறியமுடியவில்லை. ஆனால் அக்காலத்தில் அகலமான சுண்ணாம்புச் சுவர்களைக் கொண்ட பழைய கோவில் இருந்ததென்றும் புராணப்படிகள் நித்திய பூசைகள் நடைபெற்றதென்றும் அறியக்கிடக்கின்றது. பல ஆண்டுகளின் பின் அக் கட்டிடம் நிர்மூலமானது. 1945ஆம் ஆண்டு சீமேந்தால் இரண்டு மண்டபமும் வெளிக்கொட்டகையும் மடைப்பள்ளியும் நிர்மாணித்து 1946ஆம் ஆண்டு வைகாசி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 1980 ஆம் ஆண்டு சந்திரசேகர் சிவகாமி அம்பாள் பிள்ளையார் கண்ணன் நாகதம்பிரான் வேல்கள் திரிசூலம் போன்ற மூர்த்தங்கள் வழிபாட்டில் இருந்தன. 1977இல் கட்டடம் விரிவுசெய்து கண்டாமணியும் நிறுவப்பட்டது. வருடா வருடம் வைகாசித் திங்களில் சங்காபிஷேகமும் திருவிழாவும் அன்னதானமும் கலைநிகழ்ச்சிகளும் சொற்பொழிவுகளும் விமரிசையாக நடைபெற்றன. 1990ஆம் ஆண்டில் நடைபெற்ற இராணுவ நடவடிக்கையால் பூசைகளும் விழாக்களும் தடைப்பட்டன. 2001ஆம் ஆண்டு பாலஸ்தாபனம் செய்து கோவில் பொலிவுடனும் அழகாகவும் நிர்மாணிக்கப்பட்டது. ஒலிபெருக்கியும் பக்தர்களால் உவந்தளிக்கப்பட்டது. 17.05.2002 வெள்ளிக்கிழமை மகாகும்பாபிஷேகமும் அதனைத் தொடர்ந்து 12 நாட்கள் மண்டலாபிஷேகமும் சங்காபிஷேகமும் அன்னதானமும் நடைபெற்றன. அன்றுதொடக்கம் அந்தணரால் தினமும் காலையில் பூசை நடைபெற்று வருகின்றது. இத்திருத்தலத்தின் முன்றலில் வில்வ விருட்ஷமும் மேற்குத் திசையில் கொன்றை மரங்களும் வடகிழக்கு மூலையில் இயற்கையாக அமைந்த கிணறும் இக்கோலிலின் சிறப்பிற்கு மேலும் மெருகூட்டுகின்றன.

—-நன்றி—–
1.திரு. க. அருணாசலம் – இடைக்காடு
2.திரு. வை. தம்பு – இடைக்காடு
3.திரு. வே. சுவாமிநாதன் – இடைக்காடு
4.திருமதி. பொ. மகாதேவா – இடைக்காடு

1 review on “இடைக்காடு ஸ்ரீ பெரிய தம்பிரான் ஆலயம்”

  1. Vijey says:

    வட-கிழக்கு மக்களின் பண்பாட்டசம்களை இனங்கண்டு – அவற்றை ஆவணப்படுத்தும் முயற்சியினைத் தொடங்கியிருக்கிறோம். அந்த வகையில் பெரியதம்பிரான் தொடர்பான தகவல்களைத் தேடிய பொழுது தங்களுடைய இணையத்தில் இத் தகவலை காணமுடிந்தது. தகவல் பதிவ செய்தமைக்கு வாழ்த்துக்கள். மேலதிக தகவல்களி இருப்பின் அதனைப் பகிர்ந்து கொள்ளவும்.
    நன்றி
    விஜய்

Add your review

12345