இணுவில் கொட்டம்பனை வைரவர் ஆலயம்

கந்தசாமி கோயிலுக்குரிய நன்கொடை ஆதனத்தின் ஒருபகுதியில் அமைவு பெற்றுள்ளது. பொ.ராமுப்பிள்ளை என்பவரால் மேற்படி ஆலயம் ஸ்தாபிக்கப்பட்டது. வருடாவருடம் அயலில் உள்ளவர்களின் உதவியுடனும் சேகரிக்கப்பட்ட நிதியைக் கொண்டு பகுதி பகுதியாக கட்டியதால் இது சிறந்த அமைப்புடன் காணப்படுதிறது. மூலமூர்த்தியாக வைரவரும் வாசல்ப்புறத்திலே விநாயகரும், அம்மன், முருகன் சிலைகளும் வணக்கத்திற்கு உரிய வகையில் அமைவு பெற்றுள்ளன. ஆனிமாதத்தில் அலங்கார உற்சவம் நடைபெற்று வருகின்றன. எழுந்தருளி விக்கிரகம் வேறான கட்டிட அமைப்பில் தெற்கு நோக்கியமைவு பெற்றுள்ளது. நந்திக்காக நாயும் பலிபீடமும் அமைவுபெற்றுள்ளது. அலங்கார உற்சவகாலங்களில் 12 நாட்களும் குழைசாதம் வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாலயத்திற்கு வைரவர் வாகனமும், குதிரையும் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. 2003 ஆம் ஆண்டு அலங்காரஉற்சவத்திற்கு முன் கும்பாபிஷேகம் இடம்பெற்றது.

விஷேட திருவிழாக்களாக கந்தசஷ்டி, நவராத்திரி, திருவெம்பாவை, கார்த்திகைத் திருவிழா போன்றன சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

நன்றி: மூலம் – சீர் இணுவைத் திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்

Add your review

12345