பெரிய முஹீதீன் ஜீம்மா மஸ்ஜித்

இப்பள்ளியானது மானிப்பாய் வீதியில் அமைந்துள்ளது. இப்பள்ளி 100 வருடங்களுக்கு மேற்பட்டது. இங்கு ஐந்து நேர தொழுகை இடம்பெறும். நோன்பு இங்கு நோற்கப்படும். இங்கு மௌளவி என்று ஒராளை நியமிச்சு அவருக்கு உதவியாக ஐந்தோ ஏழோ, ஒன்பதோ அங்கத்தவர்கள் இருப்பார்கள். இவர்களை கொழும்பில் உள்ள ‘வக் போட்‘ தேர்ந்தெடுக்கும். தற்போதும் இப்பள்ளி சிறப்பாக இயங்கி வருகின்றது. வெள்ளிக்கிழமைகளில் ஜீம்மா பிரசங்கம் நடைபெறும். பெரும்பாலும் பெண்கள் தொழுகையில் பங்குபற்ற முடியாது. ஆனால் பெருநாள் மற்றும் தறாவி தொழுகையின் போது மட்டும் பங்குபற்ற முடியும். ஆனாலும் ஆண்கள் பெண்கள் தனித்தனியாகவே தொழுகையில் ஈடுபட முடியும்.

Add your review

12345