சிறுப்பிட்டி வடக்கு இலுப்பையடி அம்மன்

இந்தமுத்துமாரி அம்மன் வரலாறு எமக்குத்தெரிந்தவரை செல்லம் என்ற ஆச்சிக்கு அம்மனின் கலை வந்ததாக அறிந்தோம் அதன்பின் சின்னையா என்ற வருக்கு கலைவந்து. அதன் பின் இலுப்பையின்கீழ் சின்னையா என்பவரால் இந்தமுத்துமாரி ஆதரிக்கப்பட்டு வந்தது பூசைவேளையில் கற்பூரத்தை தனது வெறும் கையில்வைத்து தீபம் காட்டுவதைப் பார்த்து எல்லோரும் வியந்தது உண்டு. அதுமட்டும் அல்ல இவருக்கு கலைவந்து அவர் கலையாடி பார்த்து அம்மனின் ஆட்ச்சி அவரிடம் இருந்ததை
ஊர்மக்கள் கண்டார்கள் அப்படி விந்தையாய் வியப்பாய் வளர்ந்த அம்மனை ஆதரித்தவர் அம்மனடிசென்று விட்டார்.
அதன்பின் மெல்ல மெல்ல அம்மனின் கட்டிட வடிவை ஊர்ச்சனம் மாற்ற காரணம் அம்மன் அருள் ஊர்மகளுக்கு கிடைக்க கிடைக்க பக்தியின் காரணமானது அரைக்கட்டடத்தில் காட்சியளித்த அம்மனை ஊர்மக்கள் அழகுபடுத்திப்பார்த்தார்கள். அவள் அருளை வேண்டி பிள்ளைகளை வெளிநாடு அனும்பிவைத்து அவர்கள் சிறப்புற்று வாழ்ந்த மகிழ்வை அம்மனுடன் பகிர்ந்து கொள்ள நிலமும் புலமுமாய் இணைந்து
இன்று இத்தனை அழகு கட்டடத்தில் இன்பமாய் முத்துமாரியை நாம் பார்க்கிறோம்.

By -‘[googleplusauthor]’

 

Add your review

12345