நாகதீபம் விகாரை

இது ஒரு பழம் பெருமை வாய்ந்த பௌத்த விகாரை ஆகும். இது பௌத்த மக்களுக்கும், இந்து மக்களுக்கும் புனித தலமாக விளங்குகின்றது. வடமாணத்திற்கு விஐயம் செய்யும் அமைச்சர்கள், வெளிநாட்டவர்கள் உட்பட ஏராளமான சிங்களப் பௌத்த மக்களும் இவ்விகாரையை வழிபட்டுச் செல்வார்கள்.கௌதம புத்தர் தனதுடைய தப்பிரசங்கங்களை மேற்கொள்வதற்காக இரண்டாவது சமயம் இலங்கை வந்தபோது இங்கு இரு நாகவம்சத்தைச் சேர்ந்த அரசர்களான மகதாச மற்றும் குலதாச என்போருக்கிடையே சிம்மாசனத்திற்காகப் பல வருடங்களாக சண்டை நடந்த போது புத்தபெருமான் நாகதீபத்திற்கு வந்து அவர்களுடைய கோபதாபங்களைத் தீர்த்து வைத்தார். பின்னர் அந்த இரு அரசர்களும் புத்தபெருமானுக்கு நன்றிக்கடனாக வழிபாட்டுத் தலமொன்றை அமைத்தனர்.

Add your review

12345