முனீஸ்வரன் ஆலயங்கள்

முனியப்பர் கோயில் என மறுபெயர் கொண்டுள்ள இவ்வாலயம் 1931 ஆம் ஆண்டு தாபிக்கப்பட்டது. போர்த்துக்கேயர் ஆட்சிக் காலத்தில் முனியப்பரைக் காவல் தெய்வமாக வழிபட்டனர். குணபதி கந்தையா என்பவரே இக்கோயிலைத் தாபித்தவராவார். ஆனி மாதத்து புனர் பூச நட்சத்திரத்தன்று அலங்காரத் திருவிழா ஆரம்பமாகித் தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெற்று வருகின்றது. தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்தரம், சித்திரை பௌர்ணமி, நவராத்திரி, திருவெம்பாவை ஆகிய முக்கிய திருவிழாக்களும் இங்கு இடம்பெற்று வருகின்றன. மயில்வானம் ஞானசேகரம் என்பவரே இவ்வாலயத்தின் அறங்காவலராவார்.

Add your review

12345