சுமைதாங்கி
சுமைதாங்கி, ஏறத்தாள நாலரை அடி (1.2 மீட்டர்) உயரமும், ஒன்றரை தொடக்கம் 2 அடிவரை தடிப்புக் கொண்டதுமான ஒரு சிறிய சுவர் போன்ற கட்டுமானம் ஆகும். இதன் மேற்பகுதி ஒரே மட்டமாக இல்லாமல்இ இரண்டு அல்லது மூன்று வெவ்வேறு மட்டங்களில் அமைந்திருக்கும். சுமைகளைச் சுமப்பவர்கள் தலையில், அல்லது தோள்களில் சுமப்பார்கள். அதனால் இறக்கி வைப்பதற்குரிய மேடை, தலை உயரத்துக்கும், தோள் உயரத்துக்கும் வெவ்வேறாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு.
எமது கிராமத்ததைச் சேர்ந்த விவசாயிகளும் அயற் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொது மக்கள் வாகன வசதி இல்லாத இந்த நாள்களில் தமது பொருட்களை தலையில் தாங்கிச் செல்வதே வழமை. இவ்வாறு செல்லும் போது பாரம் தாங்காது களைப்படையும் போது இந்த சுமை தாங்கி அவர்களது சுமையை தாங்கும்.
சுமைதாங்கிகளை அமைப்பதில் ஒரு குறியீட்டுத் தன்மை கொண்ட அம்சமும் குறிப்பிடத் தக்கது. கருவுற்ற பெண்ணொருத்தி குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இறந்துவிட்டால் அவளுக்காகப் பொது இடங்களில் சுமைதாங்கி அமைப்பது வழக்கமாக இருந்தது. இது சுமைதாங்கிபோடுதல் எனப்பட்டது. அவளுக்கு வயிற்றுச் சுமையாலான துன்பம் நீங்கு என்பது நம்பிக்கை.
By – Shutharsan.S