நெற்சூடு

எமது மரபு முறைப்படி நெற்செய்கையின் பின் அறுவடை மேற்கொள்ளப்பட்டு பின்னர் நெற் பதர்கள் வெயிலில் காயவிடப்பட்டு நெல்லை பிரித்தெடுப்பதற்காக சூடு வைக்கப்படுகிறது. மாடுகள் அல்லது உழவு இயத்திரத்தின் மூலம் சூடு அடிக்கப்படுகின்றது. தற்போது அறுவடை, பிரித்தெடுப்பிற்கென தனியான இயந்திரங்கள் புழக்கத்தில் உள்ளன. இவ்வாறு வைக்கப்படும் சூடு மழை, கால்நடைகள், பறவைகளில் இருந்து பாதுகாக்கப்படுகின்றது. காலத்திற்கேற்ப மாற்றங்கள் வந்தாலும் இன்றும் கிராமப்புறங்களில் இவ்வாறான முறைகள் உள்ளன.