பழமைவாய்ந்த ஆலமரம்

நெடுந்தீவின் கிழக்கே பிள்ளையார் கோவிலின் அருகே நூற்றாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஒரு ஆலமரம் பெரிய விருட்சமாக அரை மைல் விஸ்தீரணத்திற்குக் கிளைகளைப் பரப்பிப் படர்ந்து காணப்படுகின்றது. இதன் இலைகளை ஆடு மாடுகள் உண்பதில்லை. இதன் அருகே ஓர் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இவ்வாலயம் இந்த ஆலமரத்தின் அருகே இருப்பதால் ஆலமாவனப் பிள்ளையார் ஆலயமென அழைக்கப்படுகின்றது.