பெருக்கு மரம்

இம்மரம் நெடுந்தீவின் கிழக்குப் பகுதியில் காணப்படுகிறது. இம்மரம் பல நூறு வருடங்களுக்கு மேற்பட்டதெனக் கூறப்படுகின்றது. இதன் அடிமரம் மிகவும் விசாலமானது. இதன் பூக்கள் வெண்மை நிறமாகவும், காய்கள் வட்டமான பச்சை நிறமாகவுள்ளன. இத்தகைய மரங்கள் இலங்கையில் மிகச் சிலவே உள்ளன எனக் கூறப்படுகின்றது. இம்மரங்கள் இஸ்லாமியரால் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டன என அறியப்படுகின்றது. இவை இன்று பெரும்பாலும் கால நிலை மாற்றங்களால் அழிந்து கொண்டு செல்கின்றன எனக் கூறப்படுகின்றது.