வெடியரசன் கோட்டை

இது நெடுந்தீவின் மேற்கே கோட்டைக்காடு என்னும் பகுதியில் அமைந்திருந்தது. இங்கிருந்தே வெடியரசன் என்னும் மன்னன் தனது ஆட்சியைச் செலுத்தினான் இக்கோட்டை சோழர் காலக் கட்டிட முறைப்படியே கட்டப்பட்டிருந்தது. அதன் வடிவமைப்பு பல சித்திர வேலைப்பாடுகளைக் கொண்டு புதை பொருள் ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள். இன்று இக் கோட்டை அழிந்த நிலையிலுள்ளது. இக்கோட்டையை அண்மித்துள்ள பகுதிகளில் மட்பாண்ட ஓடுகள், கூரை ஓடுகள், வட்டமான நாணயங்கள், சதுரமான நாணயங்கள் என்பனவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.