வெல்லைக் கடற்கரை

நெடுந்தீவின் தெற்கே வெல்லைக் கடற்கரை அமைந்துள்ளது. இதன் கரைகள் பெரிய பாறைக்கற்களின்றியும், மணற்பாங்காகவும் உள்ளது. வெளியூர்களிலிருந்து காலத்திற்குக் காலம் மீன் பிடிப்பதற்காக வரும் மீனவர்கள் இக்கரை நீளத்திற்குத் தங்கள் வாடிகளை அமைத்திருப்பதைக் காணலாம். வடகீழ்ப் பருவப்பெயர்ச்சிக் காற்றுக் காலத்தில் அப்பகுதிக்கடல் மிக அமைதியாகவிருக்கும். இக் காலங்களில் கட்டுமரங்களிலும், மோட்டார் வள்ளங்களிலும் பல நூற்றுக்கணக்கான மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று, திரும்பிவரும் காட்சிகளும், மீன்கள் வாங்கப் பணத்துடனும், பண்டமாற்றுப் பொருட்களுடனும் மக்கள் கூடும் காட்சிகளும், ஒரு தனி அழகாகவிருக்கும். இக்கடற்கரையை அண்டிய புல்வெளிகளிலேயே குதிரைகளையும் கூட்டம், கூட்டமாகக் காணலாம்.