ஈஞ்சு

ஈஞ்சு
ஈஞ்சு
பேரீச்சம்பழம் தெரியாமல் யாரும் இருக்க மாட்டார்கள் இது மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கிடைக்கிறது. அதே போல நம்மூர்களில் ஈச்சம்பழம் கிடைக்கிறது. எனினும் இந்த ஈஞ்சு பற்றி நம்மில் பலருக்கு தெரிவதில்லை. அத்துடன் அதை பாவிப்பதும் இல்லை. பெருமளவு இரும்புச் சத்து மற்றும் ஏனைய சத்துக்களும் நிறைந்துள்ளது. வறட்சியான காலநிலையில் வளரக்கூடிய இத்தாவரங்கள் காய்க்கும் போது தெளிவான மாற்றங்களை காட்டுகிறது. முதலில் பச்சை நிற காய்களாக இருந்து சிவப்பாக மாறி பழுக்கும் போது கறுப்பாக மாறுகிறது. பார்ப்பதற்கு மிகவும் அழகானது மட்டுமல்ல சுவையானதும் கூட. இதுவும்
யாழ்ப்பாண வளங்களில் ஒன்றுதான்.

ஈஞ்சு ஈஞ்சு

 

 
By – Shutharsan.S