கைவிளக்கு

மின்சார விளக்குகள் பாவனைக்கு வர முன்னர் கைவிளக்குகளின் பாவனையே இருந்தது. தேங்காயெண்ணெயில் எரியும் விளக்குகளும் பாவிக்கப்பட்டன. இங்கு காட்டப்பட்டுள்ளது மண் எண்ணெயில் எரியும் கைவிளக்காகும். பித்தளையால் செய்யப்பட்டது. விலங்குகள், பறவைகளெல்லாம் இரவு பகல் மாற்றத்திற்கேற்ப தமது வாழ்க்கை முறையை கொண்டுள்ளன. எனினும் மனிதனின் தேவைகள் அதிகமாக உள்ளதால் பகல் பொழுது மட்டும் போதியதாக இருக்கவில்லை. அதனால்தான் இரவு பொழுதுகளையும் பாவிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதற்காக ஆரம்ப காலங்களில் இருந்து பல கண்டு பிடிப்புகளை மேற்கொண்டுள்ளான். கல்லை தேய்த்து நெருப்பை வரவழைத்தான். பின்னர் தீப்பெட்டி கண்டு பிடிப்புடன் நெருப்பை உருவாக்கினான். இது விளக்கை ஒளிர வைக்கவும் பிரஜோசனப்பட்டது. எனினும் சிறுது காலத்திற்கு முன்னர் பிரபலமாக இருந்த இக்கைவிளக்கை இன்றும் மறக்க முடியாது. தற்போது கூட இக்கைவிளக்கிலிருந்து கொஞ்சம் முன்னேற்றகரமான லாந்தர் பாவனை இருந்து கொண்டிருக்கிறது.
Leave a Reply