சுடுமண் விளக்கு

2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட விளக்கு. களிமண்ணைத தகடு போல் தட்டி நடுவில் குழியும் பின்புறம் சிறிது உயரமான தடுப்பும் முன்புறம் திரியிட முகமும் அமைத்து அதை நெருப்பில் சுட்டு திரியிட்டு நெய்வார்த்து மருத மக்கள் பயன்படுத்திய விளக்கு. இன்றும் பலவித வடிவங்களில் எம்மிடையே புழக்கத்தில் உண்டு. இதைப்போல பல்வேறு வகையான விளக்கு வகைகளும் நம் முன்னோர்களிடம் பாவனையில் இருந்தது. உதாரணமாக –கைவிளக்கு, கஜலட்சுமி விளக்கு, சங்கு விளக்கு, மாக்கல் விளக்கு, கல் விளக்கு என்பவற்றைக் குறிப்பிடலாம்.
நன்றி – மூலம்-ஸ்ரீகாந்தலட்சுமி
http://jaffnaheritage.blogspot.com இணையம்
Copyrights © 2008-2023 ourjaffna.com
Leave a Reply