தூண்டாமணி விளக்கு

காணக்கிடைக்காத அரிய விளக்குகளில் தூண்டாமணி விளக்கும் ஒன்று. நெய் ஏந்தும் பகுதியானது மூன்று பிரிவுகளாக பிரித்து உருவாக்கப்பட்டுள்ளது. கொள்ளளவு ஒரு லீற்றருக்கும் அதிகமாகும். தமிழர் பயன்படுத்திய தொன்மையான விளக்குகளில் இதுவும் ஒன்று. இதைவிட பல்வேறு விளக்குகள் காலத்திற்கு காலம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அவையாவன கைவிளக்கு, கஜலட்சுமி விளக்கு, சங்குவிளக்கு, மாக்கல்விளக்கு, கல் விளக்கு, சுடுமண் விளக்கு, நாகவிளக்கு.
தூண்டாமணி விளக்கு என்பது இந்துக் கோவில்களின் கருவறையில் காணப்பெறுகின்ற ஒரு வகை விளக்காகும். இவ்விளக்கினை தூங்காமணி விளக்கு, நந்தா விளக்கு என்றும் அழைக்கின்றார்கள். நுந்துதல் என்பதற்கு தூண்டுதல் என்று பொருள். இவ்விளக்கின் சிறப்பு அமைப்பின் காரணமாக திரியை தூண்டுதல் அவசியமற்று இருப்பதால் நுந்தா விளக்கு என்றும் தூண்டாமணி விளக்கு என்றும் அழைக்கப்பெறுகிறது. நுந்தா விளக்கு என்பது திரிந்து நந்தா விளக்கு என்றும், தூண்டாமணி விளக்கு என்பது திரிந்து தூங்காமணி விளக்கு என்றும் அறியப்பெறுகிறது.
நன்றி- ஸ்ரீகாந்தலட்சுமி http://jaffnaheritage.blogspot.com இணையம்





Leave a Reply