கொக்குச் சத்தகம்

நமது அன்றாட பாவனைப்பொருட்களில் பல்வேறுபட்ட வெட்டும் சாதனங்களை பயன்படுத்துகிறோம். அந்த வகையில் உயரமான பகுதியில் வெட்டுவதற்கு இந்த கொக்குச் சத்தகம் பாவிக்கப்படுகிறது. இது கொக்கின் தலை போல உள்ளதால் கொக்குச் சத்தகம் என்று அழைக்கப்படுகிறது. இதை நீண்ட ஒரு தடியின் முனையில் பொருத்துவதன் மூலம் உயரமான பகுதிகளிலுள்ள வெட்டும் அல்லது பறிக்கும் வேலைக்கு பயன்படுகிறது. தென்னையில் இருந்து தேங்காய் பறிக்க, குழை வெட்ட என பல தேவைக்கு பாவிக்கலாம். பொதுவாக இரும்பில் இருந்து சத்தகம் தயாரிக்கப்படும் அதேவேளை தடியாக பூவரசு, மூங்கில், மஞ்சவுணா பாவிக்கப்படுகிறது.
Copyrights © 2008-2023 ourjaffna.com
Leave a Reply