மிதியடி

ஆதி மனிதன் உடையின்றித் திரிந்து பின்னர் இலை தளைகளை கட்டித்திரிந்து காலப்போக்கில் துணிகளிலான உடைகளைப் பாவித்தான். பின்னர் படிப்படியாக பாதணிகளை அணியக் தொடங்கினான். ஆரம்பகால பாதணிகளை மிதியடி என்று அழைப்பர். இது பலகையாலோ அல்லது மரப்பாகங்களை கொண்டோ செய்யப்பட்டது. கரடுமுரடான தரை, முள், கூரிய பொருட்களில் இருந்து தன்னைப் பாதுகாத்து கொள்ள இந்த மிதியடிகள் பாவிக்கப்பட்டது. இதில் ஒரு வகையான மிதியடியில் முள் போன்ற அமைப்பும் உள்ளது. மழுங்கிய முனை உடையதால் காலுக்கு இதமாக அமையும். இந்த வகை மிதியடிகளுக்கு மருத்துவ ரீதியான தன்மை உள்ளது. அதாவது எமது உள்ளங் கைகளிலும், பாதத்திலும் எல்லா உறுப்புகளினதும் நரம்பு முடிவிடங்கள் உள்ளன. இவ்வாறான முள் உள்ள மிதியடிகளை அணிவதால் நரம்பு முடிவிடங்கள் தூண்டப்பட்டு உறுப்புகளின் புத்துணர்விற்கு வழி வகுக்கிறது. பின்னர் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் செயற்கை தோலில் இருந்து பாதணிகள் செய்யப்பட்டு இன்றும் பாவித்துக் கொண்டிருக்கிறோம்.
Leave a Reply