நாகவிளக்கு

தூண்டாமணி விளக்குகளில் இது ஒரு வகை. மூன்று திரி வைத்து எரிக்கக் கூடியதாக உள்ளது. நாகபாம்பின் படம் போன்று இதன் பாதப்பகுதி இருப்பதனால் நாகவிளக்கு என பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. தமிழர் பயன்படுத்திய தொன்மையான விளக்குகளில் இதுவும் ஒன்று. பொதுவாக தூண்டாமணி விளக்குகள் கொழுக்கிகளில் தொங்கிக்கொண்டிருக்கக்கூடிய வகையிலேயே உருவாக்கப்படுவதாக இருக்க ஒடுங்கிய பாதத்தில் விழுந்துவிடாது இருக்கக்கூடிய வகையில் அறிவியல் முறையில் இந்த விளக்கு உருவாக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும். இதைவிட பல்வேறு விளக்குகள் காலத்திற்கு காலம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அவையாவன கைவிளக்கு, கஜலட்சுமி விளக்கு, சங்குவிளக்கு, மாக்கல்விளக்கு, கல் விளக்கு
நன்றி – தகவல் ஸ்ரீகாந்தலட்சுமி
http://jaffnaheritage.blogspot.com இணையம்
Copyrights © 2008-2023 ourjaffna.com
Leave a Reply