எழுத்தாளர் நவம்

Sharing is caring!

பெயர் – க. நவம், இயற்பெயர் – கந்தையா நவரத்தினம், இடம் – பிறப்பிடம் – தெணியகம், பொலிகண்டி, வல்வெட்டித்துறை, இலங்கை, வாழிடம் – ரொறொன்ரோ, கனடா, கல்வி – M. Sc. (Agriculture Economics – University of Peradeniya), B. A. (Honors in Political Science – University of Peradeniya), விசேட விஞ்ஞான ஆசிரிய பயிற்சி (பலாலி), தொழில் – Accreditation Facilitator / Specialist (Retired), Accreditation Assistance Access Centre, Scarborough, Ont, Canada, கனடிய அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளர். 16 வருட சேவை கொண்ட ஆசிரியர். சிறிதுகால இடைவரவு விரிவுரையாளர், பாடவிதான அபிவிருத்திச் சபை, இலங்கை கல்வி அமைச்சு

• எழுத்துலகப் பிரவேசம் – சிரித்திரன் சிரிகதைப் போட்டி 3ஆம் பரிசு (1965)

• ஸ்ரீலங்கா சாகித்திய மண்டலம் – கல்லூரி மாணவர் சிறுகதைப் போட்டியில் ‘தாயுள்ளம்’ சிறுகதைக்கு இரண்டாம் பரிசுக்கான வெள்ளிப் பதக்கம் (1965)

• பிரசுரமான முதல் சிறுகதை ‘விரதம்’ – தினபதி நாளிதழ் (1966)

• எழுதி, தயாரித்து, நெறிப்படுத்திய ‘இவர்கள்பைத்தியங்கள்’ என்ற நாடகம் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட நாடகப் போட்டியில் முதலிடம் (1973)

• எழுதி, தயாரித்து, நெறிப்படுத்திய ‘இந்தத்தேசத்துக்காக’ என்ற நாடகம் கல்வியமைச்சின் அகில இலங்கை நாடகப் போட்டியில் முதலிடத்துக்கான தங்கப் பதக்கம் (1974)

• ஸ்ரீலங்கா வர்த்தக, கப்பல் துறை அமைச்சு மற்றும் கலாச்சார அமைச்சு என்பன இணைந்து நடத்திய அகில இலங்கை ஆக்க இலக்கியப் போட்டியில் ‘உள்ளும்புறமும்’ என்ற சிறுகதைத் தொகுதிக்கு முதலிடத்துக்கான பரிசாக தங்கப் பதக்கமும் 5000 ரூபா ரொக்கப் பணமும் (1983)

• சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், உருவகக் கதைகள் என்பவற்றை வெளியிட்ட ஈழத்து சஞ்சிகைகள், நாளிதழ்கள் – தினபதி, சிரித்திரன், மல்லிகை, வீரகேசரி, தினகரன், வளர்மதி, ஊற்று,

கனேடிய, வெளிநாட்டு சஞ்சிகைகள், பத்திரிகைகள், இணையத் தளங்கள் –

தாயகம், தமிழோசை, ஈழநாடு, செந்தாமரை, மஞ்சரி, உலகத்தமிழர், சுதந்திரன், முழக்கம், வைகறை, தேசியம், தமிழர் தகவல் ஆண்டு இதழ்கள், ஆசீர்வாதம், உலகத் தமிழோசை, விளம்பரம், தாய் வீடு, காலச்சுவடு, நாளை, தூறல், பதிவுகள்.கொம், எழில்நிலா.கொம்

• ‘உள்ளும் புறமும்’ – கனடாவில் முதன் முதல் வெளியிடப்பட்ட தமிழ்ச் சிறுகதைத் தொகுதி (1991)

• ‘உண்மைகளின் மௌன ஊர்வலங்கள்’ – சர்வ தேச அரசியற் கட்டுரைகள் – கனடாவில் முதல் வெளியிடப்பட்ட தமிழ்க் கட்டுரைத் தொகுதிகளிலொன்று (1991)

• ‘நான்காவது பரிமாணம்’ கலை இலக்கிய மாத இதழின் ஆசிரியர், வெளியீட்டாளர் (1991-1993)

• ‘நான்காவதுபரிமாணம்’ வெளியீடுகளாக இதுவரை வெளியிடப்பட்ட 14 நூல்கள் –
1 நாவல், 4 கவிதைத் தொகுதிகள், 2 சிறுகதைத் தொகுதிகள், 3 கட்டுரைத் தொகுதி, 1 சுயசரிதை, 1 தகவற் தொகுதி, 1ஆய்வுநூல், 1 அகராதி

• நடித்த நாடகங்கள் 21, நெறிப்படுத்தி மேடையேற்றிய நாடகங்கள் 9, எழுதிய நாடகப் பிரதிகள் 6

• எழுதி, தயாரித்து, நெறிப்படுத்தி மொன்றியாலில் மேடையேற்றிய ‘இனியொருவிதிசெய்வோம்’ கனடாவின் முதலாவது தமிழ் சீரிய நாடகம் (1986)

• மனவெளி கலையாற்றுக் குழுவின் அரங்காடலுக்கென நெறிப்படுத்திய நாடகங்கள் ‘அவன்அவள்’ (2000), ‘ஊர்ப்போக்கு’ (2003) (பிரதியாக்கம்: கவிஞர் சேரன்); கவிமொழிவு, ‘முதுவேனிற்பதிகம்’ (2012) (கவியாக்கம்: கவிஞர் திருமாவளவன்)

• ‘சகா’ என்ற பெயரில் ஜூலை 2005 கனடாவில் தயாரித்துத் திரையிடப்பட்ட திரைப்படத்தின் முக்கிய நடிகர்

• ‘உறவு’ என்ற பெயரில் 2010 இல் கனடாவில் தயாரித்துத் திரையிடப்பட்ட திரைப்படத்தின் முக்கிய நடிகர்

• இலங்கையிலும் கனடாவிலும் தலைமை தாங்கி நடத்திய கவியரங்குகள் 16

• கணையாழி – கனடா சிறப்பிதழின் தொகுப்பாசிரியர் (2000)

• TVI யின் நான்கு வருடகாலச் செய்தி ஆசிரியர். CTR இன் சிறிதுகாலச் செய்தி ஆசிரியர்

• 2008ஆம் ஆண்டுக்கான கலை இலக்கிய விருதையும் தங்கப் பதக்கத்தையும் ‘கனடா தமிழர் தகவல் நிறுவனம்’ வழங்கிக் கௌரவித்தது.

• ‘சொல்புதிது’ அகராதித் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் சொல்லாக்கக் குழுவின் ஆரம்பகால உறுப்பினர், ஒருங்கிணைப்பாளர்.

• ரொறொன்ரோ பல்கலைக்கழகத் தமிழியல் மாநாட்டு ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிப்பாளர் (20010, 2011)

• ரொறொன்ரோ, அனைத்துலகக் குறுந்திரைப்பட விழாவின் விமர்சகர் விருதுத் தேர்வாளர் (2009, 2010, 2012)

• நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல், சமூக, பொருளாதார, கலை, இலக்கிய, கலாசாரத் துறைகள்சார் கட்டுரைகள், விமர்சனங்கள், முன்னுரைகள் எமுதியுள்ளார்.

• ஐம்பதுக்கும் மேற்பட்ட நூலாய்வுரைகளையும் வெளியீட்டுரைகளையும் அறிமுகவுரைகளையும் நிகழ்த்தியுள்ளார்

• ஈடுபாடும் ஆர்வமும் உள்ள ஏனைய துறைகள் – சங்கீதம், ஓவியம், விளையாட்டு

Represented College Soccer, Cricket and Basketball Teams at St. Patrick’s College, Jaffna. Vice-Captain, Second XI Soccer Team

Represented College Soccer, and Cricket Teams at Hartley College, Point Pedro
Vice-Caption, First XI Soccer Team, 1965
Captian, First XI Soccer Team, 1966

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyrights © 2008-2023 ourjaffna.com