இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம்

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம்இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் பல்வேறுபட்ட உதவிகள் சேவைகளை யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுத்து ஒரு முன்மாதிரியான செயற்பாட்டை மேற்கொள்கிறது. இன்றைய கால கட்டத்தில் இளைஞர்கள் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்கிறார்கள் என்ற பொதுவான குற்றச்சாட்டுகளை முறியடிக்கும் வண்ணம் இளைஞர்கள் நினைத்தால் மிகப்பெரிய மாற்றத்தையே கொண்டு வரலாம் என்பதற்கு சான்றாக இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் செயற்படுவது உள்ளம் மகிழ்ந்து பாராட்டப்பட வேண்டும். அவர்களின் சேவை மேலும் வளர வேண்டும். இதே ஏனைய பிரதேச இளைஞர்களும் செயற்பட்டால் நாம் மிக விரைவில் ஒரு முன்னேற்றகரமான நிலையை யாவரும் அதிசயிக்கக் கூடிய ஒரு தரத்தையும் அடைய முடியும்.

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் விடுத்துள்ள குறிப்பு உங்களுக்காக…

நகைச்சுவை தனமாக , தென்னிந்திய சினிமாவின் பெயரை நாமமாக கொண்டு பாடல் இயற்றி முகநூலில் பக்கம் ஆரம்பித்து வேடிக்கையென எதேச்சையாக கிடைத்த எண்ணத்தின் பிரகாரம் பயனிழந்து கிடந்த பயணிகள் தரிப்பிடத்தை பயணிக்க செய்ய எண்ணி புணரமைத்து “புனரமைக்கிறோம்” என்று முகநூல் பதிவிட்டு புகைப்படம் தரவேற்ற கிடைத்தது ஆயிரமாயிரம் வாழ்த்துக்களும் ஆசிகளும், அவற்றுக்கு நிகராய் கிடைத்தது சமூக விரும்பி என தம்மை அடையாளம் செய்வோரின் கடுப்பேத்தும் வசை சொற்கள்.
அந்த தருணத்தில் கிடைத்தது ஒரு உற்சாகமும் புத்துணர்வும் அதுதான் நீடிக்கிறது இன்றை வரைக்கும்.. ஆனால் நாளடைவில் வசை பேசியவரும் வாழ்த்துக்கள் சொல்ல தொடங்கினர்…


இது அரசியலின் ஆரம்பமோ என ஒருபுறம் சிலர் தலையை பிய்த்துக்கொள்ள, “இளம் சமூகம் இணைந்தது மீண்டும் எதையோ ஆரம்பிக்குமோ?” என புலனாய்வுகள் எம்மை நோட்டமிட எதையுமே கண்டும் காணாததுமாய் தொடர்ந்தது நம் பயணம்.. ஆனால் அவர்கள் பார்வைக்குள் வந்துவிட்டோம் என்பது நாம் வளர்ச்சியின் உச்சம் கண்டோம் என காட்டியது.
போதாத குறைக்கு பத்திரிகைகள், தொலை காட்சிகளும் எமை அடியாளப்படுத்த உலகறிந்த சங்கமாக உருவேடுத்தோம்..


சேவை எல்லாம் சிறப்பாக இருக்கிறது பெயர் மட்டும் குறை கடிய வைக்கிறது என “பெயர் மாற்று” கோரிக்கைகள் ஆரம்பத்தில் எம்மை தொடர “எம்மை இப்படியே ஏற்று கொள்பவர்கள் மாத்திரம் ஏற்று கொள்ளுங்கள்” என விடாப்படியாக நாம் இருக்க நாளடைவில் “பெயர் மாற்ற” கோரிக்கைகள் சென்ற இடம் தெரியாமல் தொலைந்தது…


இவ்வாறாய் வளர்ச்சி கண்டு இன்று இலங்கையின் தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடமாகாணம் எங்கும் எமது சேவையை விஸ்திகரித்து சார்வதேச புகழ் நிறை சங்கமாக உருவெடுத்து தேவைகள் இருக்கும் இடம் எங்கும் எமது சேவை நாமம் தனை பொறித்து வாலிபத்தின் ஆரோக்கியத்தை வான் பிளந்து உரைக்கும் சங்கமாக எங்கள் பணயணத்தை இனிதே தொடர்கிறோம்..


தொடர்ந்தும் எமது பயணம் இமாலயம் காண தங்களின் ஆசிகளையும் வாழ்த்துக்களையும் விமர்சனங்களையும் உங்கள் பிள்ளைகளான நாம் எதிர் பார்க்கிறோம்.