சாவகச்சேரி இந்துக் கல்லூரி

1904- சாவகச்சேரி சந்தைக்கண்மையில் ஒரு சைவத்தமிழ்க் கலவன் பாடசாலையாக திரு.வி.தாமோதரம்பிள்ளை அவர்களால் ஸ்தாபிக்கப்படல். 1905- அது சங்கத்தானைக்கு மாற்றப்படல் முதற்றலைமை ஆசிரியர் திரு.கே.எஸ்.கந்தசாமி. 1907 – துவிபாஷா பாடசாலையாதல். 1907-1910 – அரசினர் நன்கொடையின்றி இருந்த காலம். 1908 – தமிழ்ப் பாடசாலை சங்கத்தானை கந்தசாமி கோயிலின் பின் வீதிக்கு கொண்டு செல்லப்படல். 1921 – (அரசினர் நன்கொடையுடன்) ஆங்கிலப்பாடசாலை திரு.வி.தாமோதரம்பிள்ளை அவர்களால் ஸ்தாபிக்கப்படல்.  1922 – யாழ்ப்பாணம் இந்துச் சபையினரிடம் ஆங்கிலப் பாடசாலை ஒப்படைக்கப்படல். அரசினர் நன்கொடை பெறுதல். E.S.L.C வகுப்பு வைத்தல். 1926 – கோவிலடித் தமிழ்ப் பாடசாலை இங்கு கொண்டுவரப்படல். 1934 – C பிரிவுக் கல்லூரியாதல் S.S.C வகுப்பு ஆரம்பம். 1937 – தமிழ்ப் பாடசாலையும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சபையினரிடம் ஒப்படைக்கப்படல். 1945 – “B” பிரிவுக் கல்லூரியாதல். S.S.R வகுப்பிற்கு விஞ்ஞானக் கல்வி போதிக்கப்படல். 1949 – “A” பிரிவுக் கல்லூரியாதல். H.S.C வகுப்பு ஆரம்பம். 1954 – முதன்முதலாக விஞ்ஞானத் துறை மாணவர்கள் இருவர் பல்கலைக் கழகம் புகுந்தனர். 1957 – பழைய மாணவர் சங்கம் அமைத்தல். தமிழ்ப் பாடசாலை ஆங்கிலப் பாடசாலையுடன் இணைக்கப்படல். 1962 – (1962-06-15) அரசாங்கம் பொறுப்பேற்றல். 1970 – கலைத்துறையில் பயின்ற 17 மாணவர்களும் பல்கலைக்கழக அனுமதி பெற்றனர். 1973 – முதன் முதலாக பராசக்தி என்ற மாணவி பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெற்றார். 1979 – தேர்தல் தொகுதிக்கு ஒன்று எனும் அரசின் புதிய கொள்கைக்கு அமைய இப்பள்ளி மத்திய மகா வித்தியாலயமாக தரம் உயர்த்தப்பட்டது. 1989 – (29.08.1989) இலிருந்து இந்து ஆரம்பப் பாடசாலை என்ற பெயருடன் ஆரம்பப் பிரிவு தனித்து இயங்கத் தொடங்கியது. அவ்வேளை 6-13 வரையான வகுப்புக்களுடன் இந்துக் கல்லூரி தொடர்ந்து இயங்கியது. 1993 – (05.02.1993) இல் தேசிய பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது. 1993- முதன்முதலாக சோமசுந்தரம் சரத்ஜெயன் என்ற மாணவன் கா.பொ.த (உ/த) இல் நான்கு பாடத்திலும் அதிவிசேட சித்தி பெற்றார். 1994 – நான்கு மாணவர்கள் நான்கு பாடத்திலும் அதிவிசேட சித்தி பெற்றனர். 1996 – முதன்முதலாக மருத்துவபீடத்திற்கு யாழ் மாவட்டத்தில் முதலிடம். 1999 – 6 மாணவர்கள் 4A சித்தி பெற்றனர். கணிதத் துறையில் த. தர்மினி தேசிய மட்டத்தில் 2ஆம் இடம் பெற்றார். 2004 – நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி கல்லூரி ஞாபகார்த்த முத்திரை வெளியீடு 30.01.2004 அன்று கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. தொடர்ந்து கல்விக் கண்காட்சி, விளையாட்டுப் பெருவிழா போன்றவற்றுடன் நூற்றாண்டு விழாச் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. 2008 – காலாண்டு செய்தி மடலொன்று ”தடம்” என்ற பெயரில் வெளியிடப்பட்டு தொடர்ந்து வெளிவருகின்றது.

Founder

மேலதிக விபரங்களுக்கு
Chavakachcheri Hindu College
நன்றி : சாவகச்சேரி இந்துக் கல்லூரி இணையம்