றோமன் கத்தோலிக்க பாடசாலை

கத்தோலிக்க சமயக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சி கருதி 18.10.1916 இல் நிறுவப்பட்டதே உரும்பிராய் றோமன் கத்தோலிக்க பாடசாலை. சமய அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை சமயசேவை புரிந்ததுடன் விஷேடமாக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தது என்பதைக் கல்வியில் நாட்டமுள்ள பெரியவர்கள் ஒத்துக் கொள்வார்கள்.
இது இன்று ஆரம்பாடசாலையாகப் பிரகாசிக்கின்றது. அரசு பாடசாரைலகளைக் கையேற்ற பொழுதிலும் அடிப்படை நோக்கத்திற்கு முரணின்றி இப்பாடசாலை இயங்குகின்றது.
ஒரு காலத்தில் சமயத்தைப் பரப்பும் அடிப்படை நோக்கில் கிறிஸ்தவ பாடசாலைகள் அமைக்கப்பட்டன. இந்த நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் அங்கிலிக்கன் சபை உரும்பிராயிலும் ஒரு பாடசாலையை நிறுவியது. ஆங்கிலம் தமிழ் இரு மொழிகளையும் கற்பிக்கும் பாடசாலையாக இயங்கியது. இந்துக் கல்லூரி அதிகார சபையினர் ஆங்கில பாடசாலையொன்றைஉரும்பிராயில் நிறுவியதனால் கிறிஸ்தவ பாடசாலையில் உள்ள ஆங்கிலப்பகுதி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து தமிழ் மட்டும் போதிக்கப்பட்டு வந்தது. அரசாங்கம் பாடசாலைகளைக் கையேற்றதையடுத்து இப்பாடசாலை மூடப்பட்டது. உரும்பிராயில் முதன்முதல் ஆரம்பித்த பாடசாலை இது என்பது குறிப்பிடத்தக்கது.

1 review on “றோமன் கத்தோலிக்க பாடசாலை”