வேலணை மத்திய கல்லூரி

வேலணை மத்திய கல்லூரி

அரசாங்க மத்திய கல்லூரி திட்டத்தினூடாக இரவச கல்வியின் தந்தை சி. டபிள்யு. டபிள்யு. கன்னங்கரா அவர்களால் 1945 ம் ஆண்டு தாபிக்கப்பட்டது. ஊர்காவற்றுறை பிரதேசத்திற்கு சேர் வைத்திலங்கம் துரைசாமி அவர்களால் முன் வைக்கப்பட்டதே வேலணை மத்திய கல்லூரி திட்டமாகும். ஆரம்பத்தில் சைவப்பிரகாச பாடசாலையுடன் ஒருங்கிணைந்த படி தனியார் காணியொன்றில் பெரிய கொட்டகைகள் அமைத்து உருவாக்கப்பட்டது. தீவுப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் பலரும் இங்கு கற்றனர். பின்னர் சீமெந்து கட்டடம் உருவாக்கப்பட்டு சேர் வை. துரைச்சாமி அவர்களின் அழைப்பில் 1947 ம் ஆண்டு கல்வி அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.  தற்போதைய இக்கட்டத்தின் அடிக்கல் 1952 ம் ஆண்டு இலங்கையின் முதல் ஆளுனர் சோல்பரி பிரபு அவர்களால் இடப்பட்டது.

வேலணை மத்திய கல்லூரி

மேலதிக விபரங்களுக்கு Velanai Central College.

By – Shutharsan.S