வேலாயுதம் மகா வித்தியாலயம் – பருத்தித்துறை

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தமிழ் மொழியும் சைவசமயமும் நலிவுற்றன. இதனால் கவலையடைந்த பெரியோர்கள் ஆங்காங்கே சைவப்பாடசாலைகளை ஆரம்பித்தார்கள். வடமராட்சியில் புலோலி கிழக்கில் வாழ்ந்த ஆசிரியரான திரு வைரமுத்து லோயுதம்பிள்ளை 1895 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ம் திகதி (07.08.1895) தமது இல்லத்தில் புலோலி ஆண்கள் ஆங்கில பாடசாலை என்ற பெயரில் 14 மாணவருடன் இப்பாடசாலையை ஆரம்பித்தார். வறிய மாணவர்களுக்கு வேண்டிய புத்தகங்களும் எழுதுகருவிகளும் இலவசமாக வழங்கப்பட்டன. ஐந்து ஆண்டுகளின் பின் அரசு பாடசாலையை அங்கீகரித்தது. பாடசாலை படிப்படியாக வளர்ச்சியடைந்தது. ஓலைக் கொட்டிலாக இருந்த வகுப்பறைகள் சீமெந்துக் கட்டிடங்களாக மாற்றப்பட்டன.15.12.1961 இல் இப்பாடசாலையை அரசு பொறுப்பேற்றது. பாடசாலை மேலும் வளர்ச்சியடைந்தது. 18.09.1976 இலிருந்து பாடசாலையின் பெயர் வேலாயுதம் மகா வித்தியாலயம் என மாற்றப்பட்டது.

மேலதிக விபரங்களுக்கு Velautham Maha Vidyalayam

நன்றி :வேலாயுதம் மகா வித்தியாலய இணையம்

View Larger Map