பலகை அடித்தல்

நெல் விதைப்பின் போது தண்ணி விட்டு, மண்ணைப் பாறச் செய்து, பின்னர் உழவு மேற்கொள்ளப்படுகிறது. உழவின் பின் தரை மட்டப்படுத்தியே நெல் விதைக்கப்படுகின்றது. இல்லையேல் பாய்ச்சும் நீர் சீராகப் பரவமாட்டாது. வழிந்தோடவும் மாட்டாது. இதற்காக தற்போது பெரும்பாலும் உழவு இயந்திரங்கள் பாவிக்கப்படுகின்றன. எனினும் முன்னர் மாடுகளைக் கொண்டு கலப்பையை வைத்து உழவு, மட்டப்பலகையால் பலகை அடித்து தரை மட்டப் படுத்தப்பட்டது. மட்டப்படுத்திய பின்னர் விசிறல் மூலம் நெல் விதைக்கப்படுகிறது. இதுவும் தற்போது அரிதாகிக் கொண்டு செல்கிறது.
எமது பிரதான உணவு சோறாக உள்ளது. முன்னர் வயலிற்கு செல்லும் போது பாதணியுடன் செல்லக்கூடாது. அமுது தரும் வயல் நிலங்களை முன்னோர்கள் புனிதமாக மதித்தார்கள். அதற்கேற்ப வருவாயும், தன்னிறைவும் இருந்தது. இப்போதெல்லாம் அப்பிடியில்லை…. வயல் நிலங்களை மட்டுமல்ல, பெரியோர்களைக்கூட மதிக்காத சமூகமாக மாறிவிட்டது. இந்த நிலை இருக்கும் வரை மனித வாழ்வில் தன்னிறைவையும் சுபீட்சத்தையும் பெற்றுக்கொள்ள முடியாது.
Leave a Reply