பனையோலை பாய்

நாளாந்தம் மனிதன் தனது செயற்பாடுகளுக்கு அப்புறம் உறக்கத்திற்கு செல்கிறான். இதற்காக பாய் பாவிக்கப்படுகிறது. இப்போதெல்லாம் பெரும்பாலும் கட்டில் படுக்கைக்கு பாவிக்கப்பட்டாலும் பாயில் படுத்து உறங்குவது தனியான ஒரு சுகமாக இருக்கும். இதற்காக தற்போது பிளாஸ்ரிக் பாய் பயன்படுகிறது. இது வெப்பமான காலநிலையுள்ள நாடுகளுக்கு பொருத்தமற்றதாகும். இதைப்போல புற்பாய் பாவிக்கப்படுகிறது. இதற்கு சில காலங்களிற்கு முன்னர் பனையோலை பாய் பாவிக்கப்பட்டது. பனஞ்சார்வு வார்ந்து எடுக்கப்பட்டு இது பின்னப்படுகிறது. இந்த பாய் போல சின்னதாக பின்னப்பட்டு குழந்தைகளை படுக்க வைப்பார்கள். இதை தடுக்கை என அழைப்பர்.
Copyrights © 2008-2023 ourjaffna.com
Leave a Reply