பறைகள், கொத்து

Sharing is caring!

யாழ்ப்பாணக் குடாநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட நெல், குரக்கன், தினை, வரகு, போன்ற தானிய வகைகள் முன்பொரு காலத்தில் பறைக்கணக்காகவே விற்பனை செய்யப்பட்டது. சந்தைகளிலும் கூட சில்லறையாக அரிசி, தினை, குரக்கன் முதலியவற்றைக் கொத்துக்கணக்கில் விற்பனை செய்த காலமும் ஒன்றிருந்தது. ஒரு பறை அரிசி, அல்லது நெல், குரக்கன், தினை என்பவை இருபத்து நான்கு கொத்து அளவுடையனவாகும். சரியாக ஆறு கொத்துக் கொள்ளக்கூடிய, கைபிடிகளுடன் கூடிய பறைகள் அந்நாட்களில் வீடுகள் தோறும் இருந்தன. தினை விளைவித்தவர்களிடம் ஒரு காற்பறை அல்லது அரைப்பறை தினை தர முடியுமோ என்று கேட்பது அன்றைய வழக்கமாகும். இன்று இதன் பயன்பாடு இல்லை. ஒரு கொத்து, கால் கொத்து எனக் கொத்துக்கள் பாவனையிலிருந்த காலம் இன்று மறைந்து பறைகளையும் கொத்துக்களையும் கூட இன்று மாணவர்கள் அரும் பொருள் காட்சியகங்களிலேயே பார்க்க வேண்டிய நிலையில் உள்ளனர். பறைகள், கொத்துக்கள் என்பன தமிழர் வாழ்வுடன் ஒன்றிப் பிணைந்துள்ளன.

நன்றி-http://jaffnaheritage.blogspot.comஇணையம்

படி என்றால் எத்தனை கிலோ ???

இன்றும் கடவுள் படியளந்தார் என்று பயனபடுத்துகின்றனர்.

அரசாங்கமும், பயணப்படி, பஞ்சப்படி, என்றுதான் பயன்படுத்துகின்றனர்.

அந்தக் காலத்தில், வேலைக்குக் கூலியாக, பண்டமாற்று முறையில் ஒரு படி அரிசி, இரண்டு படி நெல் என்ற அளவில்தான் கொடுத்தனர்.

கடற்கரையோரம் அல்லது உப்பு விற்க வீதிகளில் வருவோர் படிக்கணக்கில்தான் அளந்து கொடுப்பார்கள்.

அவர்கள் அளக்கும் பொழுது எப்பொழுதுமே குவித்து வைத்துதான் அளப்பர். படியில் அளக்கும் பொழுது எப்பொழுதுமே குவிய குவியத்தான் அளப்பார்கள்.

ஆனால் எவ்வளவு குவிக்க வேண்டும் என்பது அவரவரின் விருப்பம் சார்ந்தது. எனவே, இதற்குச் சமமான கிலோ அளவு தெரியவில்லை.

நீர்மப் பொருளைக் குவியக் குவிய அளக்க முடியாது. ஆனால் நெல், கடலை போன்றவற்றை அப்படி அளக்க முடியும்.

மேலும், அரிசி என்பதன் பருமனும், வேர்க்கடலையின் பருமனும் ஒன்றாக இருக்காது.

அரிசி அதிக இடத்தினை அடைத்துக் கொள்ளும். அரிசியின் அடர்த்தியும், பருப்பின் அடர்த்தியும், அரிசி மாவின் அடர்த்தியும், வேர்க்கடலையின் அடரத்தியும் வெவ்வேறானவை.

மேலும், மாவினை அளக்கும்பொழுது இடையில் காற்று இடைவெளி அதிகம் இருக்காது, ஆனால் வேர்க்கடலையினை அளக்கும் பொழுது அதிக காற்று இடைவெளி இருக்கும்.

ஆகையால் முறையான கி.கி மாற்று இல்லை என்றே எண்ணுகிறேன். ….

இதற்குப் பதிலாக, ஒரு படியில் எத்தனை மிளகு, எத்தனை அரிசி, எத்தனை துவரை விதை, எத்தனை அவரை விதை, எத்தனை பயறு, எள்ளு என்று எண்ணிக் கூறியுள்ளார்கள் நம் முன்னோர்கள்.

ஆனால், இன்றைய நிலையில் அனைத்தினையும் நாம் மரபணுமாற்ற விதைகள் மூலமாக விளைவிக்கிறோம்.

ஆகையால், அவர்களது எண்ணிக்கைக்கும் நாம் இன்று பயன்படுத்தும் தானியங்களின் எண்ணிக்கைக்கும் வேறுபாடு இருக்கும்.

முகத்தல் அளவீடுகள்

செவிடு =360 நெல் 
ஆழாக்கு =5 செவிடு 1/20 படி 
உழக்கு/சொம்பு = 2 ஆழாக்கு 1/4 படி 
உரி = 2 உழக்கு ½ படி 
படி = 2 உரி 
மரக்கால் = 8 படி 
நாழி = 4 உழக்கு 1 படி 
குறுணி = 2 படி 
பதக்கு = 4 படி 
கலம் = 12 மரக்கால் 96 படி 
பறை = 5 மரக்கால் 40 படி 
கரிசை = 80 பறை 3200 படி 
பொதி (மூட்டை) = 3 பறை 120 படி 
கோட்டை = 21 மரக்கால் 168 படி 
1 படி அவரை 1800 அவரை 
1 படி மிளகு 12800 மிளகு 
1 படி நெல் 14400 நெல் 
1 படி பயறு 14800 பயறு 
1 படி அரிசி 38000 அரிசி 
1 படி எள் 115000 எள்

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyrights © 2008-2023 ourjaffna.com