பிளா

எமது முன்னோர்களின் கண்டு பிடிப்பில் இதுவும் ஒன்று. பனை ஓலையை வெட்டி மடித்து செய்யப்படும் பிளா இயற்கையான பனை, தென்னங் கள்ளினை குடிக்கப் பாவிக்கப்படுகின்றது. இப்படி ஓலையை மடித்துக்கட்டி கிராமப்புறங்களில் இறைச்சி, வெள்ளரிப்பழம் என்பவற்றினை காவிச்செல்லவும் பிளா மாதிரியாகத்தான் பின்னப்படுகிறது. பனையிலிருந்து இறக்கிய கள்ளை பனைக்குக் கீழே இருந்து பிளாவில் குடிப்பதும் சுகம்தானென்று தாத்தாமார் சொல்வது அன்றைய இயற்கை வாழ்வை எடுத்தியம்புகின்றது.
நன்றி – படம் – யாழ்ப்பாணம்2006 இணையம்
Copyrights © 2008-2023 ourjaffna.com
Leave a Reply