கவிஞர் சேரன்

Sharing is caring!

உருத்திரமூர்த்தி சேரன் யாழ்ப்பாணம் அளவெட்டியில் பிறந்தார். ஈழத்தின் குறிப்பிடத்தகுந்த கவிஞர்களில் ஒருவர். ஈழத்தின் நவீன கவிதையின் முதல்வரான மஹாகவியின் மகன். 1972இல் இவரது முதலாவது கவிதை பிரசுரமாகியது. எனினும் 70களின் பிற்பகுதியில்தான் தீவிரமாக எழுதத் தொடங்கினார். கவியரசன் என்ற பெயரிலும் கவிதைகள் எழுதியுள்ளர். சிறுகதைகளும் எழுதிவரும் இவர் இலக்கிய விமர்சன ஈடுபாடும் உள்ளவர். ஓவியத்துறையிலும் ஆர்வமுடையவர். பலருடைய நூல்கள் இவரது அட்டை ஓவியத்துடன் வெளிவந்துள்ளன.

இவரது கவிதைகள் சிங்களம், ஆங்கிலம், ஜேர்மன் டச்சு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கனடா, யோர்க் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்று சமூகவியல், மானுடவியல் துறை பேராசிரியராக வின்சர் பல்கலைக் கழகம், கனடாவில் பணியாற்றுகிறார்.

இவரது நூல்கள்

இரண்டாவது சூரிய உதயம் (1983)

யமன் (1984)

கானல் வரி (1989)

எலும்புக் கூடுகளின் ஊர்வலம் (1990)

எரிந்து கொண்டிருக்கும் நேரம் (1993)

நீ இப்பொழுது இறங்கும் ஆறு (2000)

உயிர் கொல்லும் வார்த்தைகள்

மீண்டும் கடலுக்கு(2005)-கவிதைகள்

கடவுளும் பிசாசும் கவிஞனும்(நேர்காணல்கள்) 2007

தமிழ் இனி 2000:

மா நாட்டுக் கட்டுரைகள் (2002)(இணையாசிரியர்)

Books in English:

The Sixth Genere: Memory, History and the Tamil Diaspora Imagination (Marga Institute, Colombo:2002)

History and Imagination: Tamil Studies in the Global Context (co-editor), TSAR Publications: Toronto, 2007.

New Demarcations: Essays in Tamil Studies(Co-editor), Toronto:Canadian Scholars’ Press, 2008

Pathways of Dissent: Tamil Nationalism in Sri Lanka,
Sage Publishers, 2009.

நாடகங்கள்:

அவன்.அவள்

ஊர்ப்போக்கு

What if the Rain fails (2008)
Not by our Tears(2009)

இசைத்தட்டுக்கள்:

காற்றோடுபேசு: சேரன்பாடல்கள் (அருவிவெளியீடு, Toronto)

கண்ணீரும்குருதியும்காத்திருப்பும் (நிலாகலையகம், Toronto)

தோணிகள்வரும்ஒருமாலை (நிலாகலையகம், Toronto)

நன்றி – அளவெட்டிஇணையம்

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyrights © 2008-2023 ourjaffna.com