செக்கு

நல்லெண்ணெய், இலுப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றின் பிரித்தெடுப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது நவீன இயந்திரங்களின் மூலம் பிரித்தெடுக்கப்படுகிறது. எனினும் பாரம்பரிய முறையில் பிரித்தெடுக்கும் போது மட்டுமே சுவை, போசணை, முக்கியமான விற்றமின்கள், தாதுப்பொருட்கள் பாதுகாக்கப்படுகிறது. இயந்திரங்களின் பிரித்தெடுப்பில் வெப்பம் அதிகம் பிறப்பிக்கப்படுவதால் விற்றமின்கள் ஆவியாகி விடுகின்றன. எவ்வாறெனினும் செக்கு என்பது இன்றும் கூட பிரபலமாக உள்ளதற்கு காரணம் போசாக்கான விளைவுதான். செக்கின் அடிமரம் பொதுவாக புளிய மரத்தின் தண்டில் இருந்து தயாரிக்கப்படுகிறது. பொருட்கள் கடையும் அச்சு முத்திரை, பாலை மரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. முன்னர் செக்கை இயக்க மாடுகள் பாவிக்கப்பட்டன. தற்போது சில மாற்றங்களுக்குட்பட்டு லான்மாஸ்ரர் பயன்படுகிறது. எள்ளைப் பாவித்து நல்லெண்ணெய் பிரித்தெடுக்கும் போது பிண்ணாக்கும் சக்கையாக எஞ்சுகிறது. இது கால்நடைகளுக்கு ஆரோக்கியமான உணவாகும். இதைப்போல தேங்காய் கொப்பரவில் இருந்து தேங்காயெண்ணெயும், இலுப்பை வித்திடத்திலிருந்து இலுப்பெண்ணையும் எடுக்கப்படுகிறது.
Leave a Reply